தாளமிட்டு விழிகள் இரண்டு!

ஆல வண்டு விழியாலே அத்துமீறி கடிக்காதே
ஆறாத வலியாகும் ஆசைகளை குடிக்காதே
தாளமிட்டு விழிகள் இரண்டும் தந்தியடிக்குது
நாளம் விட்டு குருதியெல்லாம் கும்மியடிக்குது

ஏழைப் பட்டு ஏங்கும் என்னிதயம் – உன்தன்
எரியும் பார்வை பட்டால் என்னிதயம் ஊனம்
பாடாப் படுத்தும் இந்த காதல் காலாகாலம்
பாழாப் போனவர்கள் இவ்வுலகில் ஏராளம்

செதுக்கி வைத்த அழகுப் பதுமை -இனி
வழுக்கி விழுமே என்தன் இளமை
பதுக்கி வைப்பேன் மனதில் உன்னை
பறித்து விடாதே பைங்கிளியே என் கண்ணை

கவித்தென்றல் ஏரூர்