திருவாசக அரண்மனை

யாழ்ப்பாணம் போகும் பாதையின் நுழை வாயிலில் நாவற்குழி என்னும் இடத்தில்,
அமைந்திருக்கின்ற திருவாசக அரண்மனை கடந்த வாரம் 12/07/2019 வெள்ளிக்கிழமை.

அதன் ஓராண்டுப் பூர்த்தியை அந்த இடத்தில் பெரும் விழாவாக கொண்டாடிய தருணத்தில் எனக்கும் அங்கு சென்று தரிசிக்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது.

சிவபூமி அறக்கட்டளை சார்பாக அதன் தவைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் பெரு முயற்சியின் விழைவாக கட்டப்பட்ட இந்த அரண்மனையில்

கருங்கற்களில் திருவாக பொன்மொழிகள் பதிப்பிக்கபட்டு ஆலயத்தைச் சுற்றி 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு தினமும் பூசைகள் நடந்து வருகிறது.

அதன் கோபுரத்திலும் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு , எவ்வாலயத்திலுமில்லாத
சிறப்பை இவ்வாலயம் பெற்றிருக்கிறது.

பன்னிரண்டு மொழிகளில் திருவாசக பொன்மொழிகள் கருங்கல்லில் பொறிக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு ,

பல நாடுகளிஸ் இருந்தெல்லாம் யாத்திரிகர்கள் வந்து, வழிபட்டு செல்கின்ற ஆலயமாக இருக்கின்ற சிறப்பைப் பெறுகின்றது.

உவர்ப்பு நீருள்ள இந்தப்பகுதியில் 
இந்த ஆலயத்தின் தீர்த்தம் சுத்திகரித்து நல்ல குளிர்நீர் தீர்த்தம் கிடைக்கின்ற இடமாக இந்த வழியாக கடக்கின்ற வாகனங்கள் எல்வாம் நின்று வழிபட்டு, தீர்த்தம் ஏந்திச்செல்லுமிடமாக இந்த திருவாக அரண்மனை சிறப்பை பெற்றிருக்கின்றது.

நண்பர்களே நீங்களும் யாழ்ப்பாணம் செல்லுகின்றபோது கட்டாயம் தரிசிக்கவேண்டிய ஆலயம்.
திருவாசகத்துக்கு உருகாதார் ஓரு வாசகத்துக்கும் உருகார்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு போகும்போது யுத்த பூமியாக காட்சியளித்த இடம் இப்ப சிவபூமியாக 
காட்சியளிக்கிறது.