தீயைத் தின்கிறாய்!கவிதை கவிஞர் தயாநிதி

அணைக்காமல்
அணைப்பதால்
அழிவுனக்கு…….
ஆனாலும் தீயை
தின்கின்றாய்…

ஆவியால்
ஆவியாகி
ஆகுறுதியாகின்றாய்.

அங்குலமான
அளவுடையதால்
அங்குலம் அங்குலமாகவே
உனக்கே குழியை
தோண்டுகின்றாய்..

ஆறாம்
விரலாய்
அழகாய் அமர்ந்து
ஆறாம் அறிவிழக்கின்றாய்..

முற்றும்
அழிய முன்னரே
சுற்றுப் புற
சூழலையும் அழிக்கின்றாய்..

உள்ளே இழுத்து
வெளியே தள்ளி
உடன் இருப்போரையும்
உன் வழி இழுக்கின்றாய்…

விழி..வீணே
பழிகளைச் சுமக்கிறாய்
வாழப் பிறந்த நீ
உடலை வருத்தாதே…

ஆக்கம் கவிஞர்தயாநிதி