தீர்மானி


முள்ளில்
விழுந்த சேலை
சேதாரம்.

கள்ளில்
விழுந்த வண்டு
மயானம்

காதலில்
விழுந்த ஆண்
சிறை வாசம்.

வாக்குறுதி
சறுக்கினால்
முள்ளில் படுக்கை.

சத்தியம்
தவறின் நித்தமும்
போர்க்களம்.

பாசம்
காட்டினால் மகமாயி
படம்
காட்டினால் பத்திரகாளி..

மோசம்
செய்தால் மோகினி
யாசித்தால்
வள்ளுவனின் வாசுகி.

அளவுமானி
கிடையாது எனினும்
இன்னொரு முறை
நீயே தீர்மானி..

ஆக்கம் கவிஞர் தயாநிதி