துள்ளி திரிந்த காலம்.

துள்ளி திரிந்த காலம்.
துயரம் தெரியா காலம்.
பள்ளிப்பருவம் அதில்.
பலர் கூடித்தான்இணைந்து.
துள்ளித் திரிந்த காலம்..

மரங்களில் நாம் ஏறி
மாவதில் மாங்காயை
மறைந்து சென்று தான் பறித்து
மகிழ்வுடன் உண்ட காலம் மறந்து தான் போய் விடுமா

இலந்தையும் இலனியும்
மாதுளையும் நெல்லியும்
நாவலும் நாசுவைக்க
ஈச்சையில் பழம் பிடுங்கி உண்டநாள் இனிவருமா

தேன் எடுத்தோம் திசை மறந்தோம்
பலா பழம் கண்டோம் பகிர்ந்து உண்டோம்
வானதில் பறவை போல -நாம்
பறந்து சென்ற காலம்
மகிழ்வு தந்த நிகழ்காலம்

துள்ளித் திரிந்த காலம்..

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 06.09.2021 உருவான நேரம் காலை13.21 மணி