தேவகுருபரன் சண்முகலிங்கம். ஜேர்மனி. தபேலா வித்தகர்.

ஞானமணி சண்முகலிங்கம் தேவகுருபரன்.யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஸ்ரீ காமாச்சிஅம்பாள் ஆலய ஆஸ்தான பண்ணிசை ஓதுவார் சங்கீத நாடகக் கலைஞர் அமரர் திரு சண்முகலிங்கம் விமலேஸ்வரி தம்பதியினரின் புதல்வராவார். இவர் சிறு வயதிலேயே மிருதங்கக் கலையை நாச்சிமார் கோவிலடி மிருதங்க வித்துவான் திரு வே.அம்பலவாணராகிய தனது தாய் மாமனிடம் கற்கத் தொடங்கினார்.பின் தபேலா வாத்தியத்தை இசைவாணர் கண்ணண் இசைக்குழுவில் இயங்கிய தபேலாக் கலைஞர் அமரர் திரு சந்தாணம் அவர்களிடம் பயின்று தன்னார்வத்தால் ஏனைய வாத்தியங்களையும் கற்றுக் கொண்டார்.
ஆரம்பக் கல்வியை யாழ் பெரிய புலம் பாடசாலையிலும் உயர்தரத்தினை கொக்குவில் இந்துக் கல்லூரி்யிலும் கற்றவர் பல்கலைக் கழக நுழைவு காலத்தில் போர்ச் சூழலால் புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்து விட்டார்..
தான் கரை ஒதுங்கிய தேசததில் வாழ்ந்த படி தான் கற்று வந்த இசை வித்தைகளால் தாய் மொழிக்கும் அங்கு வாழ் உறவுகளின் இன்னங்களுக்கும் வெளிச்சம் ஏற்றவும் ஆன்மீக சமயங்களின் பண்பாட்டினைக் காத்தும் 30 வருடங்களாகத் தமிழ் தொண்டாற்றி வருகின்றார்..
சிறுவயதிலேயே ஊரில் பல் வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்ற அனுபவங்கள் பேருதவியாகியது.70–80 களில் மிகவும் பிரசித்தி பெற்ற வயலின் வித்தகர் இராதா கிருஸ்ணண்.மற்றும் வயலின் வித்தகர் அ.ஜெயராமன் போன்ற மேதைகளுக்கு இசைவாணர் கண்ணண் அவர்களுடன் இணைந்து சோலோ கச்சேரிகளில் பங்கேற்ற பெருமைக்கு உரியவராகின்றார்.
மேலும் கலைத் துறையில் பல பரிமானங்களில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்பியவர் நாடக அரங்கக் கல்லூரிகளிலும் திரு. குழந்தை சண்முகலிங்கம் ஆசான் தலைமையில் பேராசிரியர் மௌன குரு அவர்களின் நெறியாளுகையில் சங்காரம். அதிகமானிடன்.போன்ற வெற்றி நாடகங்கள் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக வளாக அரங்குகளில் மேடையேறும் போது தாளவாத்தியக் கலைஞராக பணிபுரிந்து சிறப்பித்த அனுபவங்கள் நிறைவானதென்கிறார்.இன்று ஐரோப்பா ரீதியாக பல பரத நாட்டிய அரங்கேற்றங்களுக்கு தாள வாத்தியக்கலைஞராக மிளிர்கினறார்.
திருமலையூர் பரமேஸ் கோணேஸ் அவர்களின் இசைக் குழுவிலும் எங்கள் மதுரக்குரலோன் கண்ணண் அவர்களோடும் பணியாற்றியமையை பெருமையாக கருதி வாழ்கின்றார்.
ஈழத்து சங்கீத பூசணம் திரு.பொன் சுந்தர்லிங்கம்.தேனிசை செல்லப்பா.புஸ்பவனம் குப்புசாமி .சீர்காழி சிவ சிதம்பரம் போனறோர்க்கு வாத்தியக் கருவிகளை மீட்டி பாராட்டுக் களைப் பெற்ற சிறந்த கலைஞர் இவர் பிற இன மொழி சார்ந்தோரோடும் இணைந்து பணியாற்றுவது மட்டுமல்ல துருக்கி நாட்டு இசை வாத்தியமான தர்புர்க்கா.மற்றும் ஆபிரிக்க நாட்டவரின் பாரம்பரிய வாத்தியமான யம்பை எனும் வாத்தியக் கலையிலும் படித்து டிப்புளோம் எடுத்த தமிழ்க் கலைஞர் என்பது மிகையல்ல.
இன்று இசையே அவரை வாழவைக்கும் அளவில் தொழில் ரீதிக் கலைஞராக திகழ்கின்னறார்.ஜேர்மனிய நாட்டு பிரபல்யமான இசைக்குழுக்களில் klbtzmar.மற்றும் weltmusik பணி புரிந்து வருகின்றார்.அது மட்டு மன்றி thalam global rhythums என்ற தாள வாத்தியக் குழவினை உருவாக்கி சகோதரர் மிருதங்க வித்துவான் சண். நாகராஜா இவர் லய விசாரா விருதினை பெற்ற பெரும் கலைஞருடன் நடாத்தி வருகின்றார்.
இன மத பேதமின்றி இயங்கிவரும் இசைக் கலைஞர் இவர் குடும்பமும் கலையால் பின்னப் பட்டதே தனது பிள்ளைகளுடனும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி வருகின்றார்.
மகள் சாருகா வீணை மீட்க
மகன் யதார்த்தன் மிருதங்கம்.
மகன் சண்ஜீவி கடம். மோர்சிங்
குருபரன் தபேலா அணிசேர் வாத்தியங்களை இணைக்கவும் துணைவியார் மிகவும் பக்க பலமாக அனைத்து ஒத்தாசைகளையும் புரிய அழகிய கலைக் குடும்பம் ஒரு பல்கலைக் குடும்பமாக இயங்கி வருவது நம் இனத்துக்கே பெருமை தரும் சிறந்த விடையமாகும்.இப்படியான கலைஞர்களை வாழ்த்தி வளம் பெறச் செய்வதும் உலகத் தமிழருக்கு அறிமுகம் செய்து வைப்பதும் தார்மீகக் கடனாகும். வாருங்கள் உறவுகளே தேவகுருபரன் எனும் கலைவிருட்சத்தை வாழ்த்துவோம். வாழிய வாழியவே….