தொந்தரவு செய்யாதீர்கள் 


தொலைந்தவர்களை தேடும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்
முடிந்தால் என் தேடலுக்கு பதில் தாருங்கள்
மூச்சுவிட முடியாத என்னிடம் எதையும் திணிக்காதீர்கள்
ஆடை தொலைத்து அம்மணமாய் ஆங்கே மறைந்து நிற்கும் என்னிடம் அதை பேசாதீர்கள்
அப்பா சிறை
அம்மா முள்ளிவாய்க்காலில் இல்லை
அக்கா அகப்பட்டவள்
அண்ணனும் தம்பியும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்
அடுத்த சகோதரி அங்கவீனம்
அடுத்த வேளைக்கு என்ன என்ற அங்கலாய்ப்பிலே இருக்கிறோம்
ஆனால் எல்லோரும் கொண்டாடுங்கள்
ஏனோ என்னிடம் அதை திணிக்காதீர்கள்.
✍?பவளம்