நடை பிணமாய்

உணர்ச்சியற்ற
நடை பிணமாய்
அலைய விட்டாய்!

உயிர் இருந்தும்
இல்லா நிலை
எய்திட செய்தாய்!

பொய்யென்ற
போர்வையை
போர்த்திக்கேண்டே,

நாளும் பொழுதும்
கண்ணீருடன்
ஏங்க விட்டாய்!

உயிர் நாடி நின்றிடும்
வேலைவரை,
காத்திருந்தாயோ,

கரம் பற்றி காத்திட?
சொல்லிவிடு
என் உயிர், நீ தான் என்று!

ஈழத் தென்றல்