நட்பின் இலக்கணம் ?


கணீர் என்று அங்கே கேட்ட
காட்டு மாதா கோவிலின்
காண்டா மணியின் பேரொலி
காதில் இடியாய் ஒலிக்கவே,
*
திடீர் என்று தூக்கம் கலைந்து
திடுக்கிட்டு எழுந்த நானும்
திணரியபடியே படுக்கையில் இருந்து
திடமாற்ற கால்களோடு ,விரைந்தேன் .
*
சுரீர் என்றது என் இதயம் ,அங்கே
சுமையாய் கயிற்றில் தொங்கிய,என்
சுமதியின் பூவுடலை சூழ்ந்த மக்கள்
சுற்றி நின்று பார்ப்பது கண்டு.
*
பளீர் என மின்னலாய் என் கன்னத்தைப்
பதம் பார்த்தது ,அங்கே நின்றிருந்த என்
பாசக்கார நண்பனின் கரங்கள் ,அடப்,
பாவி நீயும் ஒரு நண்பனா?என்ற படி.
*
உயிர் போற வேளையிலும் அவள்
உன் பெயரையே உச்சரித்தபடியே
உடலைப் பிரிந்தாளடா, இப்போதாவது
உன் துரோகத்தை உணரடா! என்றான்.
*
பகீர் என்கிறது என்மனம் அதிர்ச்சியில்
பாழாய் போன காதல் வந்ததால் .
பாசமான உறவுகள் இப்படி வீணாய்,
பாதியிலே பிரிந்தும் பறந்தும் போனதே.
*
தளிர் விட்ட காதலை கண்டதும்
தடைபோட்ட அவள் அண்ணனுக்கும்,
தயங்காது அவளையே கைப்பிடிக்கத்
தயாரான எனக்கும் இது பெரும் அடி.
*
சுடர் விட்டெரிந்த எம் காதலை எதிர்க்க
சுற்றம், சாதிமதம், தடைக்கல் ஆனது.
சுமைதாங்கியான அவள் அண்ணனின்
சுயமரியாதையோ,அங்கே பாறை ஆனது.
*
இடர் தராது எம் காதலை என்றோ.
இணைத்திருப்பான் என்னுயிர் தோழன்,
இணைபிரியா நண்பனின் சோதரியை
இணையாக எண்ணிய நானே பாவி ,
இனியாவது நல்ல நண்பர்களுக்குள்
இப்படியான துரோகம் வேண்டாமடா.
*
துரோக நேசன்