நந்திக்கடலே ஒரு உண்மைசொல்வாய் கவிதை தே.பிரியன்

வலி தாங்கி வலிதாங்கி
வாய் மூடி போனோம்
விழி மூடி அழும் நீரில்
கலந்தாகி போனோம்

அழகான பெருவாழ்வு
கடல் மணல் மீது புதைத்தோமே
பொதுவான கனாக்காலம்
கடனோடு கழித்தோமே

இதுதானோ எம்தாகம்
இளைப்பாற முடியாதோ
வீண் பேச்சு தினம் கூடி
விளையாட்டு பொருளானோம்

ஏன்தானோ கடல் தாயே
எல்லாம் பறித்தாயே!
நீதானே எம் வாழ்வின்
உண்மையை புதைத்தாயே!

ஆக்கம் தே.பிரியன்