நறுக்குகள் கவிஞர் பாடகர் கோவிலுார் செல்வராஐன்


கல்லுக்குள் உருவம் கொடுக்கும் நான் சிற்பி.நீ கல்.
உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள்.நான் தீண்டத் தகாதவன் (ஆரியனின் அடாவடி)
————————————————————————————
எந்தப் பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி
ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றன,(மிக சிறியவை பெரிய ஞானம் கொண்டவை)
————————————————————————————–
ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீக்குச்சியின் மரணம் (உண்மையின் தரிசனம்)
———————————————————————————–
இவன் என்ன நினைப்பான்!அவன் என்ன நினைப்பான்!என்று நினைத்தே நாம் வாழ்கின்றோம்.ஆனால் ஒருத்தரும் நம்மளைப்பற்றி
நினைப்பதில்லை.(எண்ணங்கள்தான் காரணம்.)
————————————————————————————–
கடவுளுக்கு நீங்களாகவே ஓர் உருவம் கொடுத்துவிட்டபடியால் கடவுள் உங்களுக்கு எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை.(மனிதன் செய்த தவறு)
————————————————————————————–
இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருக்கவேண்டும் என்ற கவலை சிலருக்கு.இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு. (கவலைப்படுவதால் ஒரு முழம் கூடப்போவதில்லை)
——————————————————————————