நல்லவனைத் தேர்ந்தெடு தேர்தலிலே….!கவிதை கவித்தென்றல் ஏரூர்

அதர்மம் செய்யும் மனிதம் வாழும் உலகில்
ஆசை வந்து உன்னை ஆட்டும் உடலில்
தோலிருக்க சுளை முழுங்கும் ஒரு கூட்டம்
தேர்தலில் களமிறங்கி ஆடும் ஆட்டம்

பால் நிறத்தில் பனங்கள்ளு இருக்கும்
பார்த்து பருகிட நீ வேணும்
பசுந்தோல் போர்த்திய புலியா பல குள்ளநரி
படையெடுப்பான் பாதையை நீ மாற்றிக்க வேணும்

ஏழைகளின் தலைகளிலே
எளிதாய் மிளகு அரைக்க முடியும்
ஏறி மேடையிலே வாய் கிழிய பேச
சில தலைவனுக்கு தெரியும்

கோடியிலே மிதப்பவதின் கோடிகளை
தக்க வைக்க பல சீமானுக்கு பதவி வேணும்
சில கோடிகளை செலவழித்து
மக்கள் காலடியில் ஓட்டு கேட்டு நக்க வரும்
கேடிகளுக்கு அரசியலில் நல்ல வேடம்

பாடுற மாட்டை பாடிக் கறக்கிற
வித்தையென நீ உணரவரும்
போடுற ஓட்டுக்கு நீ அவனை
காண அடுத்த தேர்தல் வரும்
நாடி அவனைக்காண போனால்
முகத்திரை தெரிய வரும்
தேடி நீ போனால் அவன் வீட்டுச் சுவரில்
சாய்ந்து நித்திரை வரும்

தானைத் தலைவன் என தோளில் ஏற்றும் மூடர்களே..
நாளை நாட்டைத் திருடும் அவர்கள் திருடர்களே..
பாலையானாலும் நாட்டைக் காணாத குருடர்களே
போடும் ஓட்டை சரியாக நீங்கள் போடுங்களே..

  ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்