-நாங்கள் பெண்களல்ல !கவிதை மாதுநேசன்

 

கோவலனாக இருந்தாலும் கொண்டவனோடே
–குப்பைகொட்டும் கதை காலவாதியானது.
சவாலாக வாழ்வை ஏற்று வாழ்ந்து செல்லும்
–சரித்திரப்பெண்கள் நாமென்பதே உண்மையானது
கேவலமான கண்ணோடு எமைக்காண்போர்க்கு
—கெளுத்தி முள்ளாகுவோம் இது திண்ணமானது.
காவலாக எமக்குநாமே வளர்த்துக்கொள்வோம்
–கத்திபோன்ற புத்தியான வாய்வார்த்தைகளையே
இலாவகமாக பெண்ணை மயக்கி மதுவாக்கி
—இலகுவாக மாதுவாட எண்ணும் கோமான்களே
காலனாக உங்களைக் கண் கொத்தவென்றே
—காத்துநிற்கும் நாம் பெண்களல்ல பெண்கள்ளிகள்
ஆக்கம்  மாதுநேசன்

Merken