நான் இரண்டு மனிதன்!கதை ஜெசுதா யோ

எண்ணங்கள் சிந்தனைகள் போன போக்கில் நான் நடந்து கொண்டே இருந்தேன். என்னை யாரோ பின்தொடர்வதாக ஓர் மனம் பிரமை. அடிக்கடி திரும்பிப் பார்க்கத் தூண்டியது . பார்த்த போதும் எதுவும் என் கண்ணில் தென்படவே இல்லை . மனப் பிரமையாக இருக்கும் , என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

எங்கே போகிறென் என்பது மட்டும் இன்னும் புலப்படவே இல்லை . கால்கள் போன போக்கில் …போகிறேனே. ஒரு கணம் என்னை யாரோ அழைப்பது போல் தோன்றியது. என்ன செய்ய திரும்பிப் பார்த்தேன் உண்மையில் ஓர் உருவம் நிற்பது தெரிந்தது.
சற்று பயமாக உள்ளுக்குள் இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை, என்ன வேண்டும் . நீ யார் ? என்றேன் உரத்தே, எதிரில் இருந்து பலமான சிரிப்பு. இன்னும் பயம் என்னை ஆட்கொண்டது. கையும் காலும் என்னைமீறி நடுங்கத் தொடங்கியது . மீண்டும் சொல் நீ யார் என்றேன்,? பதில் தெளிவாக வந்தது. உன்னில் ஒருவன், உனக்குள் இருக்கும் இன்னொரு பிறப்பு. உன்னை ஆட்கொண்டு இருக்கும் ஒரு சக்கி. இப்படி அடுக்கிக்கொண்டே போனது. எனக்கு எதுவும் விளங்கவே இல்லை , நான் தானே இங்கே நிற்கிறேன். இதற்குள் என்ன இது புதுக்கதையா இருக்கிறது என்றேன்….சிரித்தபடி நின்ற அந்த உருவம் ….

சற்றும் எதிர்பாராது அது என் காலுக்கடியில் தென்பட்டது. அதிசயித்து பார்த்தேன். ஆமாம் அது வேறு ஒன்றும் இல்லை எனது நிழல் தான், மனிதன் பாதி மிருகம் மீதியென இருந்த என் உள்ளம்தான் இது வரை என்னோடு பேசியது என்பதை உணர்ந்தேன்.

இரண்டு மாபேரும் சக்திக்குள் நான் . நான் என்பது தனித்தில்லையே. எனக்குள் நிழல் போல ஒட்டியபடி இன்மொரு மனம் இருந்ததை உணர்ந்தேன்..

அந்த நேரம் பார்த்து என் உடலை யாரோ அசைப்பதும் அழைபதுமாக இருந்தது. திடுக்கிட்டு எழுந்தேன். எதிரில் அம்மா . என்ன பிள்ளை இதுவரை என்ன தூக்கம் . அப்பொழுது தான் உணர்ந்தேன் இது வரை நான் கண்டது கனவென்பதையும் உணர்ந்தேன். சுயநினைவுக்கு வந்த நான் இதோ அம்மா ஐந்தே ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன், என்றபடியே விரைந்தேன் குளியல் அறை நோக்கி ….