நீயும் ஒர்தாயே ! (கவியாக்கம் கவிஞர் மயிலையூர்.இந்திரன்!

உன்னை வாழ்த்திவடங்குவோம்
நீயும் ஒர்தாயே

வலிசுமந்து வேதனைப்பட்டு
பெற்ற பிள்ளையை தாங்கும்
முதல் தாயே நீ வாழ்க !

குருதிகலந்து மூடிப்பிறக்கும்போது
மனம் சுழிக்காமல் கழுவித்துடைத்து
கையில் ஏந்தி தாயிடம் கொடுக்கும்
அன்புத்தாயே நீ வாழ்க !

பக்குவமாய் பணிவிடை செய்து
ஒருதாய்போலே மகப்பேற்றில்
நீ செய்யும் தொண்டு சேவை மகத்தானது
பிறக்கின்ற குழந்தைக்கு நீயும்
ஒரு பெறாத்தாயே நீ வாழ்க !

வெள்ளை உடையணிந்து
மகத்தான கடமை செய்து
பலரிடம் பாராட்டப் படுகிறாய்
போற்றப்படுகிறாய் நீ வாழ்க தாயே !

மகப்பேற்றில் தாய் இறக்கலாம்
பிள்ளை இறக்கலாம்
அப்போது உறவுகளிடம் செய்தி சொல்லி -நீயும்
கண்ணீர் வடிக்கிறாய்
நீயும் தாய்தானே நீவாழ்க தாயே !

உறவில்லாத உறவாகி உதவும் உன்குணம்
கண்டு பலரோடு மனதில் பாசமாகியே
போகின்றாய் நீ வாழ்க தாயே !

உயிர்காக்கும் வைத்தியருக்கு
உதவியாய் நீ இருந்து
உதவும் உன்சேவை தொண்டு
இறைவன் தொண்டு நீ வாழ்க தாயே !

அன்புகலந்த ஆறுதலான பேச்சால்
வலியும் நோயும் தீர்ந்தே போகும் நீ வாழ்க தாயே !

நீ பலரது இல்லங்களில் மனங்களில்
தெய்வமாகவே வாழ்கிறாய்
புனிதமான தொண்டாற்றும் உன்னை
வாழ்த்திவணங்குவோம் நீயும் ஓர்தாயே !

(கவியாக்கம் கவிஞர் பாடகர் ,மயிலையூர்.இந்திரன் 29-01-2023)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert