நீர்வேலியில் பரதநடன அரங்கேற்றம்

யாழ். நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநரும் யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளருமாகிய சத்தியப்பிரியா கஜேந்திரனின் மாணவியும் –
யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியுமாகிய கஜீபனா சிவனேஸ்வரனின் பரதநடன அரங்கேற்றம் எதிர்வரும் 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு நீர்வேலி இராஜவீதியில் அமைந்துள்ள பொன்செல்வமகால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்வார்

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் க.சர்வேஸ்வரன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி க.சுதாகர், யாழ். பல்கலைக்கழக நடனத்துறை தலைவர் மைதிலி அருளையா, கோப்பாய் பிரதேச செயலர் சுபாஜினி மதியழகன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அதிபர் துஷ்யந்தி துஷிகரன் ஆகியோர் கலந்து கொள்வர்
.
கௌரவ விருந்தினர்களாக இலங்கையின் மூத்த நடன ஆசிரியர்களான கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன், கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார், கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரா ஆகியோர் கலந்து கொள்வர்.

பிரம்மஸ்ரீ நீர்வைமணி கு.தியாகராஜக் குருக்கள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் ஆசியுரைகளை வழங்குவர். யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் மதிப்பீட்டுரை ஆற்றுவார்.

அரங்கின் அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் சத்தியப்பிரியா கஜேந்திரன், பாட்டு யாழ். பல்கலைக்கழக இசைத்துறை உதவி விரிவுரையாளர் அ.அமிர்தசிந்துஜன், மிருதங்கம் – யாழ். பல்கலைக்கழக நடனத்துறை மிருதங்க விரிவுரையாளர் க.கஜன், வயலின் – இசைஞானச்சுடர் அ.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்பர்.

ஈழத்து சாகித்தியங்களைக் கொண்டு நடன உருப்படிகள் உருவாக்கப்பட்டு இந்நடன அரங்கேற்றம் இடம்பெறுகிறது என்பதுவும் இதற்கான சாகித்தியங்களை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் தவநாதன் றொபேட் ஆக்கியுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கன.