நேசமே சுவாசமானால் !கவிதை ஜெசுதா யோ

எங்கிருந்தாய்
எப்படி என்னுள் நுழைந்தாய்
என்னையறியாமல்
என் நேசத்தில் பங்குகொண்டாய்
என் உயிர் சுவாசமாகி
இன்று நீ வாழ்கிறாய்…/

அரை நொடிகூட
உன்னைவிலகாது
பின்னும் முன்னுமாய்
தொடரும் என் நேசம்
உனக்கு தொல்லையென்றாலும்
எனக்கு இன்பம் தந்து
இன்முகம் செய்து
அடியே என் குட்டியா என்று நீ
அன்போடு அழைக்கையில்
எல்லாம் மறந்து
என் சுவாசமாகிறாய்…

நினைவால் அருகாகி
என் இதயமெங்கும்
நினைவுகளால் நிரம்பி
அன்பெனும் மழையில்
என்னை நனையவைக்கும்
உன் முன்னே நானும்
சிறு குழந்தையாகி
உன் நேசத்தில்
உயிர் வாழும்
ஒரு பேதையாகி இவள்
வாழ்கிறாள்

இன்றெல்ல
என்றும் நான்
உன் நேசத்தின்
சுவாசமாகவே……

ஆக்கம் ஜெசுதா யோ