நோர்வே நாடு 

கொள்ளையழகு கொட்டிக் கிடக்கும் நாடு
வெள்ளைமனம் கொண்டவர்
வாழும் நாடு
தொல்லைகள் இன்றி வாழ்ந்திட
உகந்த நாடு
நல்லவையெல்லாம் தன்னுள்ளே
கொண்ட நாடு

ஆணையும் பெண்ணையும் சமத்துடன்
பார்க்கும் நாடு
ஆரையும் நன்கு அரவணைத்துக்
கொள்ளும் நாடு
உலகத்து மாந்தரின் உன்னதம்
போற்றும் நாடு -மக்கள்
உணர்வுகள் மதித்து நேயத்தை
காக்கும் நாடு

நீண்டு விரிந்து நிலையாக
உள்ள நாடு -தன்னை
ஆண்ட நாடுகளை நேசிக்கும்
நல்ல நாடு
நூறு வருடங்கள் முன்பு இருந்த
தன் நிலையை -இன்று
வீறு கொண்டு மாற்றிக் கொண்ட
வீரமிகு நாடு

கடலிலே எண்ணெய் வளத்தினைக்
கொண்ட நாடு
வயலிலே விவசாய வளத்தினைப்
பெருக்கும் நாடு
மீன்பிடித் தொழிலிலும் மேன்மையை
பெற்ற நாடு
ஊன் இறைச்சியிலும் நல்ல உயர்ச்சியை
கண்ட நாடு

உலகிலே சிறந்த தண்ணீரைக்
கொண்ட நாடு
உரிமைகள் யாருக்கும் ஒன்றுதான்
என்ற நாடு
பனிக்காலத்தில் பளிச்சிடும்
வெள்ளை நாடு
வேனிற்காலதில் பச்சைமயம்
ஆகும் நாடு

வெள்ளிப் பனி மலைகள் கொண்ட
மேற்குலக நாடு
நள்ளிரவுச் சூரியனால்
மேன்மைபெற்ற நாடு
அள்ளி அள்ளி அழகைத் தரும்
அருமைமிகு நாடு
சொல்லிச் சொல்லி வியக்கத்தக்க
விந்தைமிகு நாடு

ஆக்கம் கவிஞர் பாடகர் கோவிலுர் செல்வராஐா