பகிர்ந்து_வாழ்தல்_சிறப்பே!கவிதை ஜெசுதா யோ

பிறந்தது பாவமா
தமிழனாகப் பிறந்ததே பாவமா
இனவாத பிரச்சனையில்
இயலாமை தலைவிரித்தாட
பகைவன் குண்டுக்கு
பலியான உயிர்கள் எத்தனை ..?
பரிதவிக்கும் குடும்பங்கள் எத்தனை ..?

தலைவனின்று
தவிக்கும் தாரமும்
தாயையிழந்து
தவிக்கும் குழந்தையும்
பிள்ளையை இழந்து
பித்தான பெற்றோரும்
வடக்கிலும் கிழக்கிலும்
வலுவிழந்தோர் எத்தனை பேர்
வறுமையின் கோர தாண்டவத்தில்
வதைக்கப்படுபவர்கள் எத்தனை..?

வசதி உள்ளாவன் எல்லாம்
வாயால் மட்டுமே
அளந்து முடிக்கிறான்
கொடுத்துதவ மனமின்றி
பணத்தோடு பிணமாகிறான்…?

இல்லையென்றாலும்
இருப்பதை பகிரநினைக்கும்
உள்ளங்கள் இருப்பது
இன்றைய உலகில்
அதிசயமே

வாழும் போது
என்ன செய்தோம் என்பதை
அவன் இறந்த போதே
தெரிந்து கொள்ளலாம்

பாரி வள்ளல் போல் இல்லையென்றாலும்
மனமுருகி மனிதம் கொண்டு
உதவிடுதல் நற்பண்பே

வாழ்க்கை ஒரு வட்டம்
வரவும் செலவும் மாறும்
இன்றை ஏழை நாளை
பணம் வந்ததும் தன்னிலை மறப்பது வேதனையும் கொடுமையுமே

இருப்பது எதுவோ
எடுத்து பகிர்ந்து கொடுத்து
வாழ்தல் மனித பண்பே…

_  ஆக்கம் ஜெசுதா யோ