பனிக்குளிர்

உடல்
விறைக்கும்
பனிக்குளிரில்
காத்திருந்த
கண்களுக்கு
காட்சியாய்
நகர்ந்த
கருப்பு வாகனம்
புலம் பெயர் தேசம்
துயர்
இல்லத்தின் வாசல்
இரத்தக் கண்ணீரில்
உற்றார் உறவுகள்

பூக்களின் நடுவே
பூக்களாய் நகர்ந்தது
பூத உடல் …

அருள் நிலா வாசன்.