பன்முகக் கலைஞருமான ஶ்ரீகாந்தலிங்கம் இயக்கத்திலும் தயாரிப்பிலும்குறும்படங்களின் வெளியீட்டு விழா

இங்கிலாந்து வாழ் சட்டத்தரணியும் பன்முகக் கலைஞருமான சுப்பிரமணியம்; ஶ்ரீகாந்தலிங்கம் அவர்களின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் உருவான மாமன்னர்கள் சங்கிலிகுமாரன் மற்றும் பண்டார வன்னியன் ஆகியோரின் வரலாறு பற்றிய இரண்டு குறும்படங்களின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மாலை கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் பழைய மாணவர்கள் மாணவிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், கலை இலக்கிய நண்பர்கள் எழுத்தாளர்கள் உட்பட வர்த்தக பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த இந்த விழாவிற்கு கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் தலைமை வகித்தார்.

விழாவின் பிரதம விருந்தினராக தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபரும் எழுத்தாளருமான திரு கதிர் பாலசுந்தரன் அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றார். பின்னர
மேடையிலும் அவர் டிவிடி பிரதிகளை அனைவருக்கும் வழங்கினார்.

மொன்றியால் வாழ் எழுத்தாளருமான வீணைமைந்தன் சண்முகராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சங்கீத ஆசிரியர் திரு அருட்சோதி கந்தையா ஆரம்ப உரையாற்றினார்.
பிரபல வர்த்தகப் பிரமுகர் திரு சங்கர் நல்லதம்பி; டிவிடிக் களின் முதற் பிரதிகளை பிரதம விருந்தினர் திரு கதிர் பாலசுந்தரம் அவர்களிடமிருந்த பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பெற்றன.

மாமன்னர்கள் சங்கிலிகுமாரன் மற்றும் பண்டார வன்னியன் ஆகியோர் பற்றிய குறும்படங்களின்; காட்சி திரையில் காட்டப்பட்டது.

மண்டபம் நிறைந்த விழாவாக அமைந்த இந்த வெளியீட்டு விழா சிறப்பாகவும் நடைபெற்றது இங்கு குறிபபிடத்தக்கது.