பன்முக ஆற்றலாளன் கி.தீபனின்பற்றி கே.பி.லோகதாஸ்


தீபனின் புதிய பாய்ச்சல்!! குறும்படங்களுக்கு சற்று ஓய்வு!!
தீபன் குறும்படங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு தனது கவனத்தை பாடல்கள் வெளியீட்டில் திருப்பியுள்ளார்.

அதாவது தான் இயற்றிய பாடல்களை ஈழத்து,இந்திய, புலம்பெயர்ந்த,கலைஞர்களை வைத்து ஒலி ஒளி வடிவில் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

தீபன் ஆரம்பத்தில் வானொலி நேயர்கவிஞனாக அறிமுகமாகி அதே வானொலி தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சி தயாரிப்பாளராக தன்னை வளர்த்துக்கொண்டவர்.

இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.இன்னும் வெளியீட்டுக்காய் இருப்பில் சில கவிதைத் தொகுதிகள்.!

„தமிழ்விசை“இணையத்தளம் ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து „கலைச்சுடர்“என்ற இணையத்தளம் அதனுடைய ஆசிரியராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

முயற்சியும் பயிற்சியுமாக 75 குறும்படங்களை எழுதி, இயக்கியிருக்கிறார்.அதற்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசைக்கலவை எல்லாம் இவரே!
சில வேளைகளில் நடிகர், நடிகைகளுக்கான ஒப்பனையும் இவரே!( வஞ்சனம், இல்லவள், போன்ற குறும்படங்களைத் தவிர)
அதேநேரம் நல்ல புகைப்படக் கலைஞரும் கூட!

எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமான படியால் பக்கென்று பற்றுகிற கற்பூரம்!!

தற்சமயம் பத்துக்கு மேற்பட்ட பாடல்களை இயற்றி ஒலி ஒளியாக கொண்டு வர செயல்ப்பட்டு கொண்டிருக்கிறார்.

அதில் முதல் வெளியாகவிருக்கும் பாடல் பல்லவி வரிகள் இது தான்!
„வானில் விலகா காதல் நிலவா நீ! என்
வாழ்வில் பிரியா காதல் உறவா நீ!!

தனது பாடல்களுக்கு தானே மனதுக்குள் மெட்டு கட்டுகிறார் பாடல் வரிகள் துளிர் விடுகிறது முழுப் பாடலே வந்து விழுகிறது.

இதை இசையமைப்பாளர் பாடகர்களிடம் அணுகி வழங்கிறார்.அவர்கள் அதற்கு வெவ்வேறு மெட்டுகளை வழங்க இவருக்கும் அந்த மெட்டுக்கள் பிடித்து போக பாடல்கள் பிறந்திருக்கிறது.

இப்படியாக பத்துக்கு மேற்பட்ட பாடல்களை ஈழத்து ,இந்திய, புலம்பெயர் இசைக்கலைஞர்களை வைத்து ஒலி ஒளி வடிவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

என்ன தான் படைப்பாளியாக தன் படைப்பை வெளிக்கொணர்ந்தாலும் அதற்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டியவர்கள் ரசிகர்கள் தான் என்பதில் மிகவும் சிரத்தையாகவிருக்கிறார்.

தனது குறும்படங்களுக்கு ரசிகர்கள் பெரியவர்கள்,தந்த ஆசியும், ஆதரவும்,வாழ்த்துக்களும் இதற்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் தீபன்.

அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதில் பெரும் உவகையடைகிறேன்.வானுயர்ந்த சிறப்புக்களுடன் வாழ்க பல்லாண்டு!!

அவரைப்பற்றி இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது!
அதைப்போல் அவர் செய்யவுமஇன்னும்
நிறையவே இருக்கிறது!!

„போதாமை என்ற நினைப்பிருந்தால் உன் ஆளுமை இன்னும் செழிப்பாகும்“