பன்முக ஆற்றல் உள்ள கலைஞர் சின்னையா மகேஸ்வரன்

சின்னையா மகேஸ்வரன்
இந்து மகேஸ்.
பன்முக ஆற்றல்
யேர்மனி..
……………………………………….
பிரமிக்க வைத்திடும் பலர் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தி விட்டு மௌனிகளாகவும் மிகவும் தன்னடக்தோடும் வாழ்வதை நான் இப்படியான வாழ்த்து நிகழ்வுக்கு ஆராயும் போது அறிய முடிகின்றது. ஆச்சரியமாகவும் இருக்கின்றது…
பூவரசு இதழின் ஆசிரியர் யேர்மனியில் வாழ்கின்றார். நீண்ட காலங்களுக்கு முன்னர் பரிசில் வாழ்ந்து இப்போது கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் சிறி என்பவர் மூலம் எனது சிறு கதையொன்று பூவரசு இதழுக்கு அனுப்பி பிரசுரமான போது
என் மன நிலை சாகித்திய மண்டல விருது கிடைத்தது போல் இருந்தது உண்மை.காரணம் என் கை எழுத்து அச்சாக மாறிய முதல் தருணம்…எனது எழுத்துக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் மனிதர் இவர். ஆம் . புங்குடு தீவை பிறப்பிடமாகவும். புங்குடு தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனுமான சின்னையா மகேஸ்வரனாவார்..
ஆற்றல் பல வற்றின் ஆளுமையாளன்.1970 களிலேயே இலங்கையில் எழத்து துறையில் கால் பதித்திட்டவல்லுனர்.1971-1972 பகுதிகளில் இதயம் சஞ்சிகையை நடத்தியமை அறிய வருகின்றது.இங்கேயும் மனிதர்கள். நன்றிக் கடன் எனத் தொடங்கி பல நூறு கதைகளை எழுதியிருப்பது மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி.
இலங்கை வானொலிக்கு நாடகங்களை எழதி அனுப்பியிருக்கின்றார்.உதயத்தில் அஸ்தமனம் எனும் நாடகத்தில் அப்புக்குட்டி ரி.ராஜகோபாலன் பி.எச் அப்துல் கமீட் போன்றவர்களோடு நடித்தும் இருக்கின்றார்.
புலம் பெயர்ந்து யேர்மனி வந்த பின்பும் 18ஆண்டுகளாக பூவரசு எனும் சஞ்சிகையை தொடர்ந்து நடாத்தி இருக்கின்றார்.அதில் என்போன்ற பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தமையை நன்றியுடன் பற்றிக் கொள்கின்றேன்.இவரது உந்துதலால் இலக்கிய தம்பிமார் உருவாகி இன்று பிரகாசித்துக் கொண்டிருப்பது இவருக்கும் தமிழுக்கும் பெருமையான விடையமாகும்.
யேர்மனியில் வெளிவந்துகொண்டிருக்கும் வெற்றிமணி.தமிழருவி பத்திரிகைகளுக்கு பல ஆக்கங்களை வழங்கி இருப்பது சிறப்பு.
வீரகேசரி வாரப்பத்திரிகையில்.நீண்ட நாவல்களை தொடராக எழுதி வந்தமை குறிப்பிடத் தக்கது.அவ்வேளையில் தான் இந்து மகேஸ் ஆக எழுத்து துறைக்கு பெயரை வைத்துக் கொண்டார். அது இன்று வரை ஒட்டிக் கொண்டுள்ளது.
இவரது விலைமகளைக் காதலிக்கின்றேன் எனும் நாவல் பட்டி தொட்டி எங்கனும் பட்டையக்கிளப்பியது மிகையல்ல.அதிகப்படியான பதிப்புக்களை 1970 களிலேயே சாதனையாக்கியுள்ளது. தனிச் சிறப்பு. பக்தி பாடல்கள் பலவற்றை எழுதி இறுவட்டுகளாக வெளியிட்ட பாடலாசிரியராவார்.
இன்று வரை ஓய்வின்றி எழுதிக் கொண்டிருக்கும் வல்லவர். மௌனத்தில் அழுகின்றாள் எனும் நாவல் பல அத்தியாயங்களை தாண்டிச் சென்றமை இவரது தணியாத தாகத்தை இயம்புகின்றது.
விருதுகள் பல இவரைத் தேடித் தான் வந்திருக்கின்றது.இவரால் அந்த விருதுகளும் பெருமைபெறுகின்றன.தமிழருவியின் கலைத் திருவிழாக்களில் இவரது பங்களிப்பும் நிறைய இருந்திருக்கின்றது என்பதனை அதன் ஸ்தாபகர் திரு.நயினை விஜயன் பல தடவை கூறியிருப்பதை நன்கறிவேன்.
பூவரசம் பொழது எனும் மண்ணிண் மணத்தோடு பல கலை விழாக்களையும் நிகழ்த்தி எமது அடுத்த தலைமுறையினருக்கு முன்னோடியாக இருக்கின்றார்.அது மட்டுமில்லாமல் பூவரசம் பூ எனும் வலைத் தளத்தினை நிறுவி அதில் என்னைக் கவர்ந்தவர்கள் எனும் முகவரியோடு முடிந்த வரை அவர்களை ஆவணமயப்படுத்தும் பணியில் ஈடு பட்டு வருகின்றார்.
எனது முகநூல் ஆக்கங்களுக்கு நகைச்சுவையோடு கருத்திட்டு நாசூக்காக என்னையும் குட்டி வளர்ப்பது எனக்கு வசிட்டரிடம் குட்டு வாங்குவது போலிருக்கின்றது.இத்தகைய சிறப்பு மிக்க கலைஞனை படைப்பாளியை தொடர்ந்து இயங்குவதற்கு ஊக்கமெனும் மாத்திரையை வாழ்த்துக்களாக்கி கொடுத்து மகிழ்வோம் வாருங்கள். வாழ்த்துவோம் .வாழிய வாழியவே இந்து மகேஸ்.
7.12.2017.