பாடு பொருள்..

ஒவ்வொரு
கிறுக்கலுக்கும்
ஒவ்வொரு
பொருள் வேண்டும்..

தினம் தினம்
தேடு.அடிக்கடி
கூடு.
அவைதியைப்
பாடு.
அனர்த்தங்களை
பாடு.

கவலைகளை
பாடிப் பாடி
கட்டுக்குள் நீ
முடங்காதே..
எழுச்சியைப் பாடு
வன்முறைகளை
தூண்டாத வரிகளால்
கோலம் போடு.

காதலைப்
பாடு
விடுதலையின்
காதலோடுன்
உள்ளுணர்வையும்
பாடு.

எக்கணத்திலுமுன்
பாடு பொருளை
தாண்டாதே.
போலிகளைப்
பாடு.
கேலிளை குறை.
கூடவே நீ அளக்கும்
கதைகளையும் குறை…

நிண்டவரை
தேடு
கண்டவரை
கேளு.
மண்டபங்களில்
அண்டமதிர
முழங்கியவரையும்
தேடு..

முள்ளிவாய்க்கால்
முன்னுக்கும் பின்னுக்குமென
சரித்திரமுண்டு
ஐநாவில் முழங்கிட
அழை.ஊருக்கு
அச்சமின்றி போகலாம்
வரச்சொல்லி பாடு.

திங்கள்
4.03. 2019
கண்டண ஊர்வலத்தில்
கலக்கச் சொல்லு
உரக்க குரல்
கொடுக்கலாம்
வரச்சொல்லு..

முகநூலில்
நாலு விருப்புக்காக
எழுதுவதை
நிறுத்தச் சொல்லு
நமக்கென்றொரு
நாடு வேண்டுமென
கூவலாம் வரச் சொல்லு..

ஆளுக்காள்
கதை அளந்த காலம்
கை மாறிப்போச்சு
நாளுக்கு நாள்
வடிவங்களும் மாறிக்
கோலம் போடுது.
பாக்கிஸ்த்தானை
பாடுகின்றாய் நாளை
சிங்களவனையும்
பாடுவாய்.
நிறுத்தச் சொல்லு..

தூற்றுவதை
நிறுத்தி எம்மவரை
போற்றப் பழகு
நல்லதைப் பாடு
நாளை உன் பிள்ளை
வரலாற்றை
உணரும் படி பாடு…

ஆக்கம் கவிஞர் தயாநிதி