***பால் நிலவு காய்ந்ததே***

பால் போன்ற அந்த வட்டநிலவானது,
பகல் போலவே தண்னொளி வீசிட
பனிச்சை மரங்கள் பூக்களைத்தூவியே
பஞ்சனையாய் விரிந்து கிடைக்க .
பாவையவளோ, நாணத்தினால் சிவந்து
படர்ந்திருந்த பூவை அள்ளி ஆடையாக்கிட,
பாவப்பட்டபடி நானுமோ அவளைநோக்கி
பரிகசித்தபடியே மெல்ல நெருங்கிட…….
பாழாய்ப்போன அந்த அலாரம்,,விர்ர்ரென,
பக்கத்தில் கிடந்து கத்திக் கூச்சலிட,
பஞ்சி முறித்தபடி வழமைபோலவே
படுக்கையை விட மனமில்லாது எழுந்து,
பணிக்கு தயாராகிக்கொண்டுமே,
பாதிவரை கண்டகனவின் மீதிநினைவோடு
பனிக்குள் நடந்து பணித்தளம் ஏகினேன்.
கனா நேசன்