பித்தாய் மனம்

மத்தியான நேரத்திலே
மனம் ரொம்ப தவிக்கையிலே
ஒத்தையிலே வந்தாலே ஒருத்தி .
அத்தை மகள் அவள் தான்
ஆனாலும் குறும்புக்காரி .

சத்தமே இல்லாமல்
சாரைபோல் நெருங்கி
கத்துவாளோ என நினைத்து
கைகளைப் பிடித்திழுத்தேன்.

முத்துப் பல் வரிசை
முழுவதுமாய்க் காட்டி
வித்தியாசமாய் சிரித்தாள் .
வெட்கத்தால் கன்னம் சிவந்தாள்.

சத்தான சமிக்ஞை கண்டு
சரிந்து மனம் காதல் பாட
பித்தனைப் போலானேன் .
பிரிய மனம் இல்லாமல்

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்