பிரசவகளம்..


காட்சிகளே
கருப் பொருளாகி
தாக்கங்களே
பெரும் பொருளாகி
வரிகளால் அமைந்த கூடு…
வலிகளுக்கும்
வாழ்க்கைக்கும்
வரையறையில்லாத
போராட்டங்களின்
சமரசத்தின் ஏடு.
சத்தமின்றி ஏதோ
பெரு யுத்தம்.
உருவமில்லா உணர்வுகளின்
நித்தப் பிரசவம்…
கவிதைகளின்
கட்டுக்குள்
கட்சிதமாகி நுழைந்திட
எதுகை மோனையை
துணையாக்கிய ஒப்பந்தம்…
முரண்பாடுகளும்
உடன்பாடுகளும்
தீவிர ஒன்று கூடலில்
உயிர்ப்புள்ள காவியங்களாக
கவிதைகள் பிரசவம்…
எங்கோ ஓர்
மூலையில் எல்லைகள்
தாண்டியும் தமிழின்
தாகத்தோடு தழுவி
என் கவிக் குழந்தைகளுக்கு
தொட்டில் கட்டி ஆரவாரம்..
நெதர்லாந்து நாட்டில்
ஆவணி இருபந்தைந்தில்
முகநூல் முத்து எனும்
நாமத்துடன் உங்கள் முன்
அறிமுமாகும் நன்நாளதுவாகும்..
கந்தையா ஸ்ரீறிதாஸ்
எனும் பற்றாளன் தன்
வித்தியாசப்படும் வித்தியாசங்கள்
எனும் சிறு கதை நூலையும்
அறிமுகமாக்கும் நன்நாள்..
மகிழ்வுறும் இனிய நாள்
25.08.2018 சனியன்று மாலை
நான்கு மணிக்கு சந்திப்போம்….

 

ஆக்கம் கவிஞர்தயாநிதி