பிரமாண்டமாக நடைபெற்ற „வணக்கம் ஐரோப்பா“ „நெஞ்சம் மறக்குமா“ கலை நிகழ்வு

மண்டப நிறைந்த நிலையில் 23.12.17 அன்று சனிக்கிழமை மாலை 4.18 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட „வணக்கம் ஐரோப்பா „கலை நிகழ்வு அடுத்த நாள் அதிகாலை2.30 மணிவரை மண்டநிறைந்த நிலையில் சபையோரின் உற்சாகமான கரவொலி மகிழ்ச்சி தழும்பிய ஆராவராரத்துடனும் நடைபெற்று நிறைவு பெற்றது.

வணக்கம் ஐரோப்பாவின் முதல் நிகழ்ச்சியைவிட இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது.

நடனம் பாடல் நகைச்சுவை நிகழ்ச்சி என விறுவிறுப்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் சபையோரை பரவச உணவர்வினால் கட்டிப் போடப்பட்டிருந்தது.

மதுரக்குரலோன் கண்ணன் தாயகத்திலிருந்து வருகை தந்த சாந்தனின் மகன் கோகிலன் ஆகியோரின் பாடல்கள் உச்சம் தொட்டு நின்றன.

கோகிலன் பாடல்களை இரசித்து ருசித்து நடனத்துடன் பாடிய போது கரவொலியும் ஆரவாரமும் மண்டபம் எங்கும் நிறைந;திருந்தன.

நடனங்கள் யாவும் நீயா நானா எனப் போட்டி போட்டன.

Paris இந்திரன் லோகதாசு குழுவினரின் நகைச்சுவை நிகழ்வுகள் யேர்மனி மிதிலனின்? நாடகவடிவ நிகழ்ச்சிகள் யாவும் மனம் கொள்ளத்தக்கவையாக இருந்தன.

நிகழ்ச்சிகளை முல்லை மோகன், கிருஸ்ணா, திலகேஸ்,சூரி………ஆகியோர் திறம்பட தொகுத்து வழங்கினார்கள். ஆய்வாளர் கந்தையா முருகதாஸ்