பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம் கவிதை நூல் வெளியீட்டு விழா.!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 ஞாயிறு தமிழ்த் தேசிய கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பான முறையில்இடம் பெற்றது.மங்கள விளக்கேற்றல்,செந்தமிழ் வாழ்த்துப் பா ஆகியனவற்றுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூக ஆர்வலர் திருமிகு குகன் குணரட்ணம் அவர்கள் கலந்து கொண்டார் .கவிதை நூல் பற்றிய கருத்துரைகளை திருமிகு கவிஞர் தமிழ்மணி தேவன் ,கவிஞர் திருமதி தமிழ்ப்பிரியா இளங்கோவன், ஊடகவியலாளர் இரா.தில்லைநாயகம் உட்பட பலர் வழங்கினர்.கவிதாயினியின் வரியின் வீச்சையும்,அதன் வலிமையையும் எடுத்துக் கூறிய அவர்கள் கவிதாயினி அவர்கள் தனது மனதில் சுமந்த ஆழமான வலிகளை வரிகள் ஊடாக கவிதையில் பிரதிபலித்திருப்பதாக கூறினர்.ஏற்புரையினை கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்கள் வழங்கினார்.நிகழ்ச்சியினை திரு.அப்பையா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஊடகத்துறையைச் சார்ந்த ,இலைமறை
காயாக இருந்து சமூகவலைத்தளங்களூடாக பல படைப்புகளை வழங்கி வருகின்ற கவிஞர்களான திரு.நாகலிங்கம் செல்வராஜா ,திரு.க.ம.இரவி உட்பட பலர்
பிரதம விருந்தினராலும்,நிகழ்ச்சி தொகுப்பாளரினாலும் இந் நிகழ்வில் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.அறிஞர்கள் ,
கவிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வு தமிழால் அனைவரையும் ஒருங்கிணைத்தது வரவேற்கத்தக்க விடயமாகும்.

க.ம.இரவி.