பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC)

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC) கீழ் இயங்கி வரும் தமிழ்க் கல்விக்கூடங்களில் ஒன்றான “ ஈஸ்ற்ஹாம் தமிழ் கல்விக் கூடத்தின் தலைமை ஆசிரியர் என்றபொறுப்பில், எமது கல்விக்கூடத்தின் வளர்ச்சியின் பின்னணியில் … திருமதி தேவிகா.அருனா ஆக்கங்களுக்கும் , செயற்பாடுகளுக்கும் திருமதி தேவிகா.அருனா உறுதுணையாக நின்று ஒத்துழைக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகத்தினரையும் , ஆசிரியப் பெருந்தகைகளையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் „உலகத் தாய்த் தமிழான நாள் “ இன்று மீட்டிப் பார்ப்பதில் பெருமிதம் கொள்கின்றேன் .
தமிழினத்தின் உயிர்ப்பை ஒளி விளக்காக்கி உலகிற்கு உணர்த்தும் தமிழ் மொழியை  நன்றாக இறைவன் படைத்தனன்n 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே “ என்ற கூற்றிற்கு இணங்க தமிழோடு கலை , கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும், இன உணர்வினையும் எடுத்துரைத்து எதிர்கால சந்ததியினரை நற் பிரஜைகளாக உருவாக்குவதில் புலம் பெயர்ந்த காலத்திலிருந்தே இசை தவிர்ந்த என் நேரங்கள் … ஆசிரியர்களுடனும், மாணவச் செல்வங்களுடனும் கழிவதற்கு என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் பலம் என்பதை அறிவேன் .
“ நாமமிது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திருத்தல் நன்றோ சொல்வீர்
தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவை தமிழ்த்திறன்,விளையாட்டு , தேர்வு, கலை என்பவற்றினூடே நனவாக்கும் சில நிழற்படங்கள் உங்கள் முன்னே … நம் கடன் பணி செய்து தொடருமே ….