புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018 விழாமலர்” தொடர்பான, பகிரங்க இறுதி அறிவித்தல்… (உங்களின் கவனத்துக்கு)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தில், அரசியல் (சார்பு அரசியல்) தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் உள்நுழைப்பதில்லை என்பதுடன், ஒன்றிய நிதியில் இருந்து, சுவிஸில் எந்தவொரு விழாவும் மேற்கொள்ளக் கூடாது எனும் முடிவுடன் செயல்படும் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்” இம்முறையும் வழமைபோல் மேற்படி “வேரும் விழுதும் -2018” விழாவை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

“வேரும் விழுதும் 2018” விழா…

*** எதிர்வரும் 17.03.2018 அன்று மாலை இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” விழா நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில், ஒன்றியத்தின் நிதியில் இருந்து எந்தவொரு சதமும் எடுக்காமல், செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்தி, உறவுகள், நண்பர்களின் பங்களிப்பில் விழாவை நடத்துவது எனவும், இதுக்குரிய அனுசரணையை அக்கறை உள்ள ஒன்றிய முக்கியஸ்தர்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும் எனவும், குறிப்பிட்ட சில உறவுகள், மற்றும் நண்பர்களிடம் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்கள் கேட்பதெனவும் முடிவு எடுக்கப்பட்டு பகிரங்கமாக அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. (பகிரங்கமாக அறிவிப்பதன் மூலம் பலரும், கடந்தமுறை போன்று, தாமாக முன்வந்து உதவுவார்கள் என நம்புகிறோம்.)

**“விழா மலர்”..

** “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்”, “வேரும் விழுதும்-2018 விழா மலருக்கு” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சனுடன் இணைந்து, உபதலைவர் திரு.லிங்கம் சஞ்ஜய் பொறுப்பாக இருந்து செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

**விழாமலரில் உங்கள் கருத்துக்கள்..

*** விழா மலரில் தங்களின் கருத்துக்களை (வாழ்த்துக்கள், கட்டுரைகள், கவிதைகளைத்) தெரிவிக்க விரும்பும் எவராயினும், அதுகுறித்த முழுமையான விபரத்தை, இம்மாதம் (ஜனவரி) இருபதாம் திகதிக்கு -20.01.2018.- முன்பாக தந்துதவ வேண்டும் எனவும், (அதன் பின்னர் வரும் எதுவும் விழாமலரில் பிரசுரிக்கப்பட மாட்டாது.) இதுகுறித்து நிர்வாக சபையுடன் கதைக்கும்படியும் பகிரங்கமாக அறிய தருகிறோம். -இதுவே எமது இறுதியான, உறுதியான அறிவித்தல்-

தங்களின் கருத்துக்களை (வாழ்த்துக்கள், கட்டுரைகள், கவிதைகளைத்) தெரிவிக்க விரும்பும் எவராயினும், அதனுடன் தங்களின் படத்தையும் இணைத்து, கீழ்காணும் மின்னஞ்சலுக்கு (pungudutheevuswiss@gmail.com அல்லது swissranjan@gmail.com ) உடன் (இம்மாதம் இருபதாம் திகதிக்கு முன்னர்) அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

** விழா மலரில் விளம்பரம்..

விழா மலரில் விளம்பரங்கள் பிரசுரிக்க விரும்பும் வர்த்தகர்கள், அதுகுறித்த முழுமையான விபரத்தை, இம்மாதம் (ஜனவரி) இருபதாம் திகதிக்கு -20.01.2018.- முன்பாக கீழ்காணும் மின்னஞ்சலுக்கு (pungudutheevuswiss@gmail.com அல்லது swissranjan@gmail.com ) உடன் தந்துதவ வேண்டும் எனவும், (அதன் பின்னர் வரும் எதுவும் விழாமலரில் பிரசுரிக்கப்பட மாட்டாது.) இதுகுறித்து நிர்வாக சபையுடன் கதைக்கும்படியும் பகிரங்கமாக அறிய தருகிறோம்.

** விழா மலரில் அனுசரணை வழங்குவோரின் விபரம்..

எமது விழா அறிவித்தலைக் கண்டதும் “சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக் குழுவினர் இன்னிசை வழங்க சம்மதித்து உள்ளனர். மண்டப உதவிக்கு திரு.கௌதமன் (வரசித்தி மஹால்), திரு.கிருபா புகைப்பட உதவிக்கும், திரு.சிவம் வீடியோ படப்பிடிப்பு உதவிக்கும், “தமிழன் 24” இணையத்தின் சார்பாக திரு.தாஸ் துண்டுப்பிரசுர உதவிக்கும் சம்மதித்து உள்ளனர்.

திரு.ரவீந்திரன் (சாய் ட்ரடேர்ஸ்), திரு.தயாபரன், திரு.இலட்சுமணன், திரு.சஞ்ஜய், திரு.குழந்தை, திரு.கிருஷ்ணகுமார், திரு.பன்னீர்செல்வம், திரு.பிரேம்குமார், திரு.சதா, திரு.அன்பு, திரு.பத்மநாதன் ரவி (வசந்தன்), ஆகியோர் இதுவரை “அனுசரணை” வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

**ஏனையோரிடம் இருந்தும் பங்களிப்புகளை அனுசரணையாக எதிர்பார்த்துள்ளோம்**. நன்றி..

** மேற்படி விழாவுக்கு அனுசரணை வழங்குபவர்களின் விபரங்களையும், விழா மலரில் பிரசுரிக்க உள்ளதினால், நீங்களும் மேற்படி விழாவுக்கு, உங்களால் முடிந்தவரை விரைவாக (அடுத்த மாதம் (ஜனவரி) இருபதாம் திகதிக்கு -20.01.2018.- முன்பாக தந்துதவ வேண்டும் எனவும், -20.01.2018.- அனுசரணை வழங்கி, விழா சிறப்புற உதவி புரியுமாறு அன்புரிமையுடன் கேட்க்கிறோம்.

இதுக்கென அனுசரணை வழங்கக் கூடியவர்கள் யாராயினும், அவர்களிடம் (வர்த்தகர்கள், பொதுமக்களிடம்) உதவிகளை உடன் கோருவதெனவும், அதேவேளை சுவிஸ் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் தாமாகவே முன்வந்து உதவ வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், இதனை பகிரங்கத்தில் அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

** விழா மலரில் சந்தாப் பணம் செலுத்தியோரின் விபரம்..

** விழா மலரில் இவ்வருட வரவு செலவுக் கணக்கு விபரத்தை, பிரசுரிக்க உள்ளதினால், இதுவரை சந்தாப்பணம் செலுத்தாதோர் (கடந்த 2016 வருடம், மற்றும் இவ்வருடம்- 2017 & 2018) உடன் சந்தாப் பணத்தை செலுத்தி “ஊர் நோக்கிய சேவையில் இணைந்து பயணிக்குமாறு” பணிவுடன் வேண்டுவதுடன், இதுகுறித்து ஒன்றிய பொருளாளர் திரு.அ.கைலாசநாதனுடன் (குழந்தை) கதைக்கும்படியும் பகிரங்கமாக அறிய தருகிறோம்.

** கடந்த வருட “வரவு, செலவுக் கணக்கறிக்கை” (சந்தாதாரர்கள் விபரங்களுடன்) இன்னும் ஐந்து தினங்களில் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” இணையத்தில் (http://www.swisspungudutivu.com/ ) பிரசுரிக்கப்படும். அதில் எதுவும் சரி, பிழைகள் இருப்பின், உடன் ஒன்றிய பொருளாளர் திரு.அ.கைலாசநாதனுடன் (குழந்தை) கதைக்கும்படியும் பகிரங்கமாக அறிய தருகிறோம்.

ஏனெனில் விழா மலரில் “கடந்த வருட வரவு செலவுக் கணக்கு” விபரத்தை, பிரசுரிக்க உள்ளோம்.

***விழா நிகழ்ச்சிகள்…

குறிப்பிட்ட சில பொதுவான நிகழ்ச்சிகளுடன் (நாட்டியம், நடனம், மற்றும் சில கலை நிகழ்வுகளுடன், விருந்தினர் உரை போன்ற நிகழ்வுகளுடன்) இளையோரை உள்வாங்கும் நோக்கில், இளையோர்களினால் நடத்தப்படும் “NEXT GENERATION” (அடுத்த தலைமுறை) எனும் நிகழ்வை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடத்துவது எனவும்.., இதனை திரு.திருமதி. தனுசன்(தயா) கீர்த்தனா இருவரும் பொறுப்பெடுத்து இளையோருடன் இணைந்து நடத்துவதென தெரிவித்த ஆலோசனையை ஒன்றிய நிர்வாகசபை ஏற்றுக் கொண்டது.

மேலதிக நிகழ்வுகள் தர விரும்புவோர் இம்மாதம் இருபதாம் திகதிக்கு முன்னர் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(**மேலதிகமான விபரத்துக்கு ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் -077.9485214, ஒன்றிய செயலாளர் திரு.சதா -078.8518748, ஒன்றிய பொருளாளர் திரு.குழந்தை -079.9373289, ஒன்றிய கல்விப் பொறுப்பாளர் திரு.இலட்சுமணன் .079.5063194, ஒன்றிய உபதலைவர் திரு.சஞ்ஜய் -078.6539292, ஆகிய இலக்கங்களுடன் “உடன்” தொடர்பு கொள்ளவும்)

இவ்வண்ணம்…

திரு.செல்லத்துரை சதானந்தன்,

செயலாளர்,

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து-