புருஷன் வீட்டில் வாழப்போற பெண்ணே


பூட்டிய வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த
புத்தகப்பூச்சிகளில் ஒருத்தி நான்.
பூங்காவுக்குள் அவிழ்த்து விட்ட,
பூஞ்சிட்டுக்குருவியாகிறேன் இன்றோடு.
**
புதிதாய் திருமணமாகி இன்று,
புதுமாப்பிள்ளையிடம் சேரவே,
புலம்பெயர் நாட்டுக்குத் தானும்
புறப்படப்போகிறேன் நானும்.
**
புகுந்த நாடு போனதும் முதலில் ,
புதுப்புது நட்புகளை சேர்த்திடுவேன்.
புதுமையான பழங்கங்களை தேர்ந்து,
புரியாவிடினும் அதை பழகிடுவேன்.
***
புருசனுக்கு தோதான நிறத்திலே தான்
புத்தம்புது சேலை வாங்கி உடுப்பேன்,
புழங்கும் நட்புகளுக்குள் நான்மட்டுமே,
புதுமையையாய் என்னை காட்டிடுவேன்.
***
புருஷனை பெயர் சொல்லி அழைப்பேன்.,
புகுந்த வீட்டாருக்கு முன்னால் மட்டும்,
புருசனுக்கு மகளாகி’அப்பா’என்றழைத்து,
புதிதாய் ஒரு உறவை வளர்த்திடுவேன்.
**
புதிரான நாகரீகங்கள் பல படைப்பேன்.
புருஷனை மாத்தியே சோடியாய் சில,
புகைப்படங்கள் அழகாய்ப்பிடித்து முகப்
புத்தகத்தில் ஒட்டி மகிழ்ந்திடுவேன் .
***
புகலிடம் தந்த நாட்டிலே ,நானும்
புதுமைப் பெண்ணாய் ஜொலித்துமே
புகழோடு பெருமைகளையும் தமிழுக்கு
பூசி மகிழ்ந்து வாழ்ந்து காட்டிடுவேன்.
***
புல நேசன்