போரவலம்…


விதியின்
நகர்வா?
வினையின்
நகர்வா..?
பாதி உயிர்
பதையிலும்
மீதி உயிர்
பங்கரிலும்….
எஞ்சியோரின்
அஞ்சிய நகர்வு
துஞ்ச மறந்த
பல இரவுடன்…
பதட்டம் நிறைந்த
நகர் வலம்.
விடுதலை விரும்பிய
பெரும் பயணம்….
நம்பிக்கை நாண்
அறுந்த அவலம்.
தும்பிக்கை பலமானவரை
நாடிய பயணம்…..
ஊரோடு ஒத்த
நள்ளிரவு பயணம்
விடியலின் விளிம்புடைந்த
விரக்தியின் உச்சம்….
வையம் வடிவிழக்க
சாவு மையம் கொள்ள
கோரம் தாண்டவமாடி
இனமொன்று மடிந்த
மாதம் இந்த மாதம்…
முள்ளி வாய்க்கால்
முற்றுகையானது…
உலகப் படைகளின்
சுற்றி வளைப்பில்
தர்மமும் தலை குனிந்தது….

தயாநிதி