மச்சானின் கை அசைவில்

பூப்பறிக்கும் நோன்பு கண்டாள்
புன்னகை உதிர கொண்டாள்

ஆக்கிரமித்த மனசுக்குள்ளே
ஆசை மச்சான் வரவை கண்டாள்

அரிசி பற்கள் ஆலைக்குள்ளே
ஐந்து விரல்கள் பதிய கொண்டாள்

இரவில் இணந்த இனிய கனவை
பகல் கனவில் பலிக்க கண்டாள்

முந்தானை சிறகடிக்க
இதயத்துள்ளே இளைப்பெடுக்க
வலது கால் பெருவிரலால்
வரவேற்ப்பை அச்சடித்தாள்

நிறை குடம் தழும்ப தழும்ப
நிறைமதியின் பாதம் நினைய

நுகர்வோர் எண்ணை கண்டாள்
மச்சானின் கை அசைவில்

ஐந்து வாரம் பொறு என்று