மட்டக்களப்பின் கல்லடியில் வி. சபேசன் உருவான ‚துணை‘ குறும்படத்தின் 40 பேர் வரைகண்டுகளித்தனர்

கடந்த சனிக்கிழமை (27.07.2019) மட்டக்களப்பின் கல்லடியில் என்னுடைய இயக்கத்தில் உருவான ‚துணை‘ குறும்படத்தின் திரையிடலும் அதைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.

ஏறக்குறைய 40 பேர் வரையில் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், இலக்கியவாதிகள், சமூகசிந்தனையாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள், குறும்பட நடிகர்கள் என்று பல தரப்பட்டவர்கள் அங்கே இருந்தார்கள். குறும்படம் பற்றிய கலந்துரையாடல் மிகவும் காத்திரமானதாக இருந்தது.அஙகே வெளிப்பட்ட கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தன. சில குறைகளையும் ஓரிருவர் சுட்டிக்காட்டினார்கள். அவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.

பெண் உரிமை, தந்தை பெரியார், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை, நடுத்தட்டு வகுப்பைச் சேர்ந்த மக்களுடைய அணுகுமுறை, யாழ்ப்பாணிய சிந்தனை, புலம்பெயர் வாழ்வியற் கலாச்சாரம் என்று பல விடயங்களைத் கலந்துரையாடல் தொட்டது. இப்படியான விடயங்களை அன்றைய பொழுதில் ‚துணை‘ குறும்படம் பேச வைத்திருக்கிறதே என்ற எண்ணம் எனக்கு பெரும் திருப்தியை தந்தது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ‚கா கலை இலக்கிய வட்டத்திற்கு‘ நன்றிகள்.

‚துணை‘ குறும்படம் வரும் ஞாயிற்றுக் கிழமை 04.08.2019 அன்று கிளிநொச்சியில் ‚கருணா நிலைய மண்டபத்தில்‘ திரையிடப்படுகிறது. நிகழ்வு பிற்பகல் 3.30இற்கு ஆரம்பமாகும். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.