மட்டக்களப்பு வர்த்தக சினிமா துறையினரின் இசை வெளியீட்டு விழா!

மட்டக்களப்பு வர்த்தக சினிமா துறையில் பாரிய சாதனை படைத்த “சிப்ஸ் சினிமாஸ்” தயாரிப்பு நிறுவனமானது தனது இரண்டாவது படைப்பாக இம்மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடவிருக்கும் நடுத்தர நீளத் திரைப்படமான “எனக்குள்ளே” எனும் திரைப்படத்தினை தயாரித்து வருகின்றது.அந்தவகையில் புதிதாக சமூக சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் “எனக்குள்ளே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த (05) திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு வில்லியம் மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.“சிப்ஸ் சினிமாஸ்” உரிமையாளரும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களது தலைமையில், “எனக்குள்ளே” திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் முரளீதரன் அவர்களது நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வை இப்படத்தின் இயக்குநர் கோடீஸ்வரன் மற்றும் அவரது படக்குழுவினர் சிறந்த முறையில் நடாத்தியிருந்தனர்.இசை வெளியீட்டு விழாவிற்கு விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாக கலந்து கொண்டேன்.நம் நாட்டு கலைஞர்களின் நடிப்பில் “சிப்ஸ் சினிமாவினால் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் “எனக்குள்ளே” திரைப்படத்தின் இசை இறுவெட்டின் முதல்பிரதி “சிப்ஸ் சினிமாஸ்” உரிமையாளரும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம், தயாரிப்பாளர்களான முரளீதரன், கோடீஸ்வரன் மற்றும் இசை அமைப்பாளர் கேசாந்த் குலேந்திரன் ஆயோரினால் வெளியிட்டு வைக்கப்பட்டது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert