மத்திய கல்லூரியில்இடம்பெற்ற ‚இனிய நந்தவனம்சிறப்பிதழ் வெளியீட்டு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ‚இனிய நந்தவனம்‘ யாழ்ப்பாணச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா.

இந்தியா தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து வெளியாகும் ‚இனிய நந்தவனம்‘ இதழானது மாதந்தோறும் வெளிவரும் இதழாகும். அத்துடன் பல்வேறு தளங்களை மையப்படுய்திய சிறப்பிதழாகவும் இது வெளியாகின்றது. அதன் தொடர்ச்சியாக ‚இனிய நந்தவனம்‘ யாழ்ப்பாணச் சிறப்பிதழானது 20.02.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது. முன்னதாக நிகழ்வின் பங்கேற்பாளர்கள் தமிழ் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.

நிகழ்வுக்கு யாழ்பாவாணன் மின்னூல் வெளியீட்டக இயக்குநர் எழுத்தாளர் யாழ்பாவாணன் தலைமை வகித்தார்.

சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை இசைத்தார். வரவேற்பு நடனத்தினை சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை ஓய்வுபெற்ற அதிபர் சரோஜினி கனகரட்ணம் வழங்கினார். ஆசியுரையினை முனைவர் நெடுஞ்செழியன் வழங்கினார். இனிய நந்தவனம் பற்றிய அறிமுகவுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். வாழ்த்துரையினை முனைவர் உ.பிரபாகரன் வழங்கினார். சிறப்புரையினை உதயன் நாளிதழ் முகாமையாளர் குமாரவேல் சரவணபவான் நிகழ்த்தினார். நிகழ்வில் வேம்படி மகளிர் கல்லூரி, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஆகிய பள்ளிகளின் மாணவர்களின் நடனங்களும் இடம்பெற்றன.

இதழின் வெளியீட்டுரையை தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் மு.சு.கண்மணி நிகழ்த்தினார். இதழினை யாழ்ப்பாணம் உதயன் நாளிதழ் முகாமையாளர் குமாரவேல் சரவணபவான் வெளியிட வட்டுக்கோட்டை சச்சியா இரும்பக உரிமையாளர் சச்சிதானந்தன் முதற்பிரதி பெற்றார்.

இதழின் திறனாய்வினை யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் யமுனானந்தா நிகழ்த்தினர். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நிகழ்வின் தொகுப்புரைகளை எழுத்தாளரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருமான தர்மினி ரஜீபன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமதி ஆகியோர் வழங்கினர்.
நன்றியுரையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளை ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம் தொகுத்தளித்தார்.

யாழ்ப்பாணத்தில் சிற்றிதழுக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் வெளிப்டுத்திய நல்லதொரு நிகழ்வை காணமுடிந்தமை மனநிறைவே