மரபுக்கவிதை.

தலைக்கனம்
இல்லாத உன்
ஆழுமை அழகு.
இலக்கணம்
தவறாத தமிழ்
எழுத்து சுத்தம்.
தமிழை
அழகாய் சொரியும்
பொய்கை நீ.
உன்
உச்சரிப்பு
என் உச்சியை
குளிர வைத்ததுண்டு.
பற்கள்
பறி போயும்
சொற்கள்
சிதறவில்லை.
ஒப்புக்கும்
உன்னிடம்
ஒப்பனையில்லை.
விழியால்
பேசும் உன்
மொழியும் பேரழகு.
தப்புக் கண்டால்
தாண்டவமாடும்
பத்திரகாளி..
உன்மீதான
என் கற்பனைகள்
என்றுமே
விற்பனைக்கில்லை.
புன்னகை
புவியீர்ப்பினை
விஞ்சிய ஈர்ப்படி.
புதுப் புது
கவிதைகள்
கண்ணில் படலாம்.
கசிந்துருகும்
நினைவுகளின்
புது ராகமே…
என்றும் பட்டுப்
போகாத
மரபுக் கவிதை
நீதானடி.

ஆக்கம் கவிஞர் தயாநிதி