மரமே.!


உன்னருமை புரியாத
உத்தமர்கள் ஐஞ்சுக்கும் பத்துக்கும்
ஆசைப்பட்டு அடியோடு
அழிக்கும் கொடுமை …

பச்சிளம்பாலகருக்குப்
புரியும் உன்னருமை
பழம் திண்டு கொட்டைபோட்டதாகப்
பறைசாற்றும் எங்கள்
பயில்வான்களுக்குப் புரியவில்லயே…

ஆசையாக ? நீருற்றிஉனை வளர்த்து
ஆடு மாடு கடிக்கவிடாது உனை
ஆளாளுக்குக் காவல்காத்து
வானுயர்ந்த சோலையாக நீ
அழகு கொளிக்கும் போதுதானே…

ஆண்டவனுக்கே பொறுக்காத
அனியாயத்தை அராஜகத்தை
அடியோடு உனை அளித்து
அரங்கேற்றுகிறது
பணத்துக்கு வித்து
பரவசமடைகிறது…

உன்னை அழித்துத்
தன் தலையிலே
தானே மண்ணள்ளிபோடும்
மாபெரும் தவறை
இந்த மனிதர்கள்
செய்வதன் காரணம்தான் என்ன…?

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது
நம் ஒவ்வொருவருடைய கடமை!!!

அன்புடன்
ஈசன் சரண்(நாக கேதீஸ்)