மறந்தோம்…மறந்தோம்..

தவழ்ந்தோம்
விழுந்தோம்
எழும்பினோம்
நடந்தோம்…
வளர்ந்தோம்
கடந்தோம் நாடும்
கடந்தோம்
பிரிந்தோம்
மறந்தோம் இன்று
எல்லாம் மறந்தோம்..
மண்ணை
மக்களை.
ஆலய மணி
ஓசையை கொட்டில்
வீடுகளுக்கு
ஒளி ஏற்றிய
மண்ணெண்ணை
வண்டிலை…
தபால் பெட்டியை
எங்களூர்
தபால் கார ரை
தந்தியை
தரகரை இன்னும்
வீதிகளில்
இருந்த குட்டி கடைகள்…
கரகாட்டம்
குதிரையாட்டம்
பொம்மையாட்டம்
கூத்தும் காத்தன்
கூத்தும் ..கோவில்
வீதி கூடவே
கடலை வறுவலின்
வாசம். விற்பனை
செய்யும் ஆச்சிகள்..
குட்டிக் குட்டி
சந்தைகள்
மீன் வாங்க போய்
வாங்கிய நளினங்கள்
சங்கக் கடைகளில்
பாணுக்கு அதிகாலை
காவல் நின்றமை
தெருவோரம் நின்று
அடித்த அரட்டைகள்..
முதியோரையும்
ஆசிரியர்கள் வருகை
கண்டு ஓடி ஒழிந்தமை
திருவெண்பா காலத்தில்
சங்கூதி சேமக்கலம்
அடித்தபடி ஊரை எழுப்பியமை
சித்திரா பறுவத்துக்கு
கஞ்சிக்கு அரசி சேர்த்தமை…
சிவராத்திரி கால
வேடிக்கைகள்..
தண்ணீர் பந்தலுகள்
தேர் இழுப்பு
அந்தோனியார்
கோவில்
கூடு சுத்து
எத்தனை எத்தனை
எல்லாம் அழகிய
அரும் நினைவுகள்
மறந்தோம் மறந்தோம்
எல்லாம் மறந்தோம்
தொலைந்தோம்
தொலைத்தோம்..

ஆக்கம் கவிஞர் தயாநிதி

ம்..