.மறுபக்கம்..குறும் படம் பற்றி இயக்கனர் குணபதி கந்தசாமி அவர்களின் பார்வை!

மற்றுமொரு எம்மவர் பெண் இயக்குனர் சுபோஜி சிவக்குமார்.
இவர் இயக்கிய..மறுபக்கம்..குறும் படம் பார்த்தேன்.நம்ப முடியவில்லை. எம் இளம் சந்ததியின் தற்போதைய மனநிலை.பெற்றோர் நிலை மிகவும் ஜதார்த்த உரையாடல் நடிப்புடன் இயக்கி இருந்தார் தனக்கு கிடைத்த வசதிகளுடன்.பல நடிகர்கள் இருந்தாலும் அனுஷா கண்ணன்.பால்ராஜ்.விக்கி நாதன் ஆகியோர் மிக ஜதார்த்தமாக நடித்துள்ளனர்.மற்றவர்களை குறை சொல்லவில்லை.மேல் சொன்ன மூவரின் கதாபாத்திரப்படைப்பும் காரணம்.எது எப்படி இருப்பினும் புலம் பெயர் வாழ்வில் ஒரு மிக முக்கியமான ஒரு கருப்பொருளை மையமாக்கி இந்த மறுபக்கம்.குறும்படத்தை இயக்கி உள்ளார் ஜெர்மனி வாழ்.சுபோஜி சிவகுமார்.இவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..இங்கே சுபோஜி சிவகுமார் மற்றும்..மறுபக்கம்..கலைஞர்களுடன்