மலடியாவதே மேல்

தீண்டாத பெண்ணாக நானும் இப்போ
…தெருவில் நிற்க்கிறேன் பாராய்.
வேண்டாத விரோதி போல் என்னை
…வெயிலில் விட்டனரே கேளாய்.
பாண்டவர் போல் ஐவரை நானும் பெற்று
…பாசத்துடன் பாலூட்டி வளர்த்தெடுத்தேன்
மாண்டுபோன என் கணவனுக்காக என்
…மஞ்சள் குங்குமத்தை இழந்து நின்றேன்.
வேண்டுவதை பிள்ளைகளுக்கு வேண்டவே
…வெயிலில் விறகுவெட்டி விற்று வந்தேன்.
கூண்டுக் கிளிகளாய் நாம் ஒற்றுமையாய்
…கூடி வாழ்தோம் ஒரு கூரையின் கீழ்.
ஆண்டுகள் கழியவே அவர்களும் வளர்ந்து
…ஆண்பிள்ளையாகி மாப்பிள்ளையகினர்.
கண்டறியாத பெண்கள் வந்தே அவர்களைக்
…கவர்ந்து சென்றனர் தம் கைகளோடு.
அன்னையான என்னை ஏனோ இங்கு
…அநாதை யாக விட்டுப் போயினர்.
கண்ணாக காத்து வளர்க்க நான் பட்ட
…கஷ்டங்கள் துன்பங்கள் யார் காணுவார்
பெண்ணாக பிறந்தால் இனி, பிள்ளைகளை
…பெறக்கூடாது. மலடியாவதே மேல் ….
தாய்நேசன்