மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்விழா

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் (Sri Lanka Institute of Information Technology – SLIIT) தமிழ் மாணவர்கள் முன்னெடுத்த கலாநேத்ரா என்ற பெயரில் அமைந்த தமிழ்க் கலைவிழா கடந்த 06.04.2019 பல்கலைக்கழக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகேயும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமி;ழ்ச்சொல்லருவி ச.லலீசனும் கலந்து கொண்டனர். 
.
இயல் இசை நாடகம் என்பவற்றுடன் அறிவியல்மற்றும் தொழினுட்பத்தையும் இணைத்து நாற்றமிழ் சார்ந்ததாக விழா இடம்பெற்றது. 
.
பொறியியல், சட்டம், தகவல் தொழினுட்பம், படவரைவியல், முதலிய துறைகள் சார்ந்து 9500 மாணவர்கள் தற்போது பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர். இவர்களுள் தமிழர்கள் மற்றும் தமிழ்ப் பேசுவோர என 500 மாணவர்கள்; உள்ளனர். 
.
நிகழ்வில் கலாநேத்திரா என்ற சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது. இதனை துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே வெளியிட்டு வைத்தார். சஞ்சிகை குறித்த உரையை தமிழ் விவாதிகள் கழகத்தின் தலைவர் ராஜன் பூபாலசிங்கம் இந்துஜன் ஆற்றினார். 
.
நிகழ்வில் வீரமகேந்திரபுரம் என்ற பெயரில் கந்தபுராணத்தை அடியொற்றிய நாடகத்தை எண்ணிம (டிஜிற்றல்) தொழினுட்பங்களுடன் மேடையேற்றினர். 
.
இன்றைய தமிழர்கள் தமிழ் உணர்வுடன் வாழ்கின்றார்களா? இல்லையா என்ற தலைப்பில் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனை நடுவராகக் கொண்டு விவாத நிகழ்வு இடம்பெற்றது.

சிலிற் கற்கைநெறியை முன்னெடுப்பதில் உள்ள இடர்ப்பாடுகளை நகைச்சுவையுடன் வில்லிசையாக ஆற்றுகை செய்தனர். 
.
திரைசார்ந்த (சினிமா) இசைக்கோர்வைகள் மற்றும் நடன அசைவுகளுக்கு முன்னுரிமை வழங்கி ஆடல் பாடல் கலந்த கொண்டாட்ட நிகழ்வாக விழா இடம்பெற்றிருந்தது. 
.
மாற்று மொழியினர் மிகப்பெரும்பான்மையினராக வாழும் சூழலில் அறிவியல் கற்கைகளைப் பயிலும் மாணவர்கள் தமிழ் உணர்வுடன் இத்தகைய விழா ஒன்றை முன்னெடுத்தமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.