முயன்றால்_வெற்றி_உனதே

உன்னைப் பற்றி ஒருவன்
வசைபாடுகிறான் என்றால்
கொஞ்சமும் அஞ்சாதே
சும்மா இருப்பவனின்
பொழுது போக்கு அது
தன்னைப்பற்றி தனக்கே
நம்பிக்கை இழந்தவன்
மற்றவனைப் பற்றி
அதிகம் புராணம் பாடுவான்
சமுதாயம் ஒரு விலங்கினம்
நீ தோற்றாலும் தூற்றும்
நீ ஜெயித்தாலும் பின்னோடு வரும்
நீ வெற்றி பெறும் போது
எண்ண மறவாதே
முடிவல்ல தொடக்கம் என்று
நீ தோல்வியை சந்தித்தாலும்
எண்ணிக் கொள்
அடுத்து வெற்றி என்று
உறுதி கொள்
ஆலமரம் காற்றுக்கு
அசைவதில்லை
புயல் அடித்து சரிந்தால்
எழும்வுவதில்லை
நாணல் காற்றுக்கும்
ஆடியபடியே சரியும்
மீண்டும் நிமிர்ந்து நிற்கும்
நினைவிருக்கிறதா உனக்கு
நீ நாணல் போல் இருந்துவிடு
அதை பார்த்து ஏளனமாய் எண்ணிவிடாது
குனிந்தும் பணிந்தும் இருந்தவன்
சமுதாயத்தில் தாழ்ந்ததில்லை
உழைப்பின்றி முன்னேற எண்ணிவிடாதே
தோள்கள் வலிக்க உழைத்தவன்
வாழ்க்கையில் வீழ்ந்தவனில்லை
பிறர் பேச்சைக் கேட்டு
அஞ்சிவிடாதே
தன்னம்பிக்கை ஒன்று தான்
உன் உயர்வின் ஊன்றுகோல்
மறந்துவிடாதே
முயற்சி அது உன்னோடு
என்றும் இருக்கவேண்டும்
உன்னைத் தடுக்க
எமனாலும் முடியாது போகும்
உழைத்துக் கொண்டே இரு
பிறரின் ஊதாசினங்களை மற
வெற்றி அருகில் இருக்க
வெறும் வெட்டிப் பெச்சுக்கு மடியாதே
சோதனையின்றி சாதனையில்லை
தொடரும் சோகத்தில்
மிளிரும் வெற்றி உனதாகும்
குறிக்கோள் உள்ளவன்
குன்றிப் போனவன் இல்லை
வியர்வைத் துளிகள் நிலத்தில் சிந்து
வெற்றிப் படிகள் உன் கையில் எடு
இலைகளெல்லாம் உதிந்தது கண்டு
மரங்கள் இறக்க நினைத்தால்..
வசந்தகாலம் வந்ததும்
வசந்தம் வீசுவது எப்படி .,?
எண்ணி நட
எட்டிப் பிடி
ஏணிகள் இருக்கிறது
ஏறிக்கொள் நீயும்
வெற்றிகள் உனது
பற்றிக்கொள்
கைதட்டல்கள்
உனக்கானது
மகிழ்ச்சி கொள்
முயற்சியின் வெற்றிகள்
உனதே….//
ஜெசுதா யோ….