முல்லைத்தீவு பாரதி மகா வித்தியாலயத்தில்,மாணவர்கள் கெளரவிப்பும், பரிசளிப்பு விழாவும்.

ஈழத்தின் முல்லைத்தீவு பாரதி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும், பரிசளிப்பு விழாவும்.

08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அணிவகுப்புடன் கெளரவிக்கப்படும் மாணவர்களும், விருந்தினர்களும், ஆசிரியர்களும் அழைத்து வரப்பட்டனர். மு/பாரதி மகா வித்தியாலய அதிபர் சு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டார். சுடர்கள் ஏற்றுதல், இறைவணக்கம், வரவேற்பு நடனம் என்பன முறையே இடம்பெற்றன.

ஆசிரியர் ரவிசாந் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். தலைமையுரை, முதன்மை அதிதி உரை ஆகியன இடம்பெற்றதனைத் தொடர்ந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த 34 மாணவர்களுக்கான கெளரவிப்பும், பரிசளிப்பும் இடம்பெற்றது. இவர்களில் சாதனா, கிருசாந், நிசாங்கனி, சாதனா, ஆகிய மாணவர்கள் திறமைச் சித்தி பெற்றவர்களாவர். கெளரவிப்பு மற்றும் பரிசு அளித்தலை அதிபர், முதன்மை அதிதி, ஆசிரிய ஆலோசகர் சி.சுதாகரன், யோ.புரட்சி, சிறுவர் நிதிய திட்ட இணைப்பாளர் லக்சிகா, தேராவில் தமிழ் வித்தியாலய அதிபர் பாலகிருஷ்ணன், சமாதான நீதவான் மாடசாமி, அகிலன் உள்ளிட்ட அதிதிகள் வழங்கி வைத்தனர். அத்துடன் கல்விசார் திறமையான மாணவர்கள், நேர்த்தியான வருகை மாணவர்கள், தரம் 01 மாணவர்கள் ஆகியோருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உரைகளை ஆசிரிய ஆலோசகர் சி.சுதாகரன், யோ.புரட்சி, அகிலன் ஆகியோர் வழங்கினர்.

தரம் 06 மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. அத்துடன் கவிதை, பாடல் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கான பரிசு அளிக்கைகளை கவிஞர் து.திலக் உள்ளிட்டோர் வழங்கியிருந்தனர்.

நன்றியுரையினை பெற்றோர் சார்பாக தினேஸ்குமார் வழங்கினார். தரம் ஐந்து மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான சிவதீபன், சுகிர்தா ஆகிய ஆசிரியர்களும், ஆரம்பப் பிரிவின் அனைத்து ஆசிரியர்களும் கெளவிக்கப்பட்டனர். திறமைசார் மாணவர்களோடு, ஏனைய மாணவர்களையும் ஊக்குவித்த நல்லதொரு நிகழ்வாக இது அமைந்திருந்தது.