முல்லைஸ்வரம் இசை குழுவின் பின்னனி இசையில்.வெளியான இசைப்பேளைபற்றி தகலுடன் குமாரு யோகேஸ்!


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எமது முல்லைஸ்வரம் இசை
குழுவின் பின்னனி இசையில். கடந்த ஆண்டு
ஒரு இசை தட்டு வெளியீடு செய்திருந்தோம்
அது மிகவும் மகிழ்சியான தருணம்.
அதே போல்.19_5_2019. இன்றைய தினமும்
(கோபுரத்தரிசனம் கோடிபுண்ணியம்) 
என்று இசை தட்டினை இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்.. இன்று மாலை
மூன்று மணிக்கு வெளியீடு செய்து வைத்தோம்…இந்த இசை தட்டினை
உருவாக்கம், மற்றும் வரிகளை எழுதி
பாடியும் இருக்கின்றார். ஓய்வு பெற்ற அதிபர்
திரு மா.மாசிலாமணி அவர்கள்.
அவரோடு இணைந்து பாடியவர்கள்.
திரு.அ.சதீசன், திருமதி. கமலாவதி இரத்தினசிங்கம், திருமதி.சாந்தகுமாரி கமலகாந்தன்,திரு ச.ஜெயசீலன். ஆகியோர்.
இசை ப.கருணாகரன் அவர்கள்.
இந்த நிகழ்வை தலமை தாங்கி நடத்தியவர்
ஆசிரியர். திரு.ஜெயவீரசிங்கம் 
ஆசி உரை வற்றாப்பளை கோயில் தலைவர்
திரு.குகதாசன் அவர்கள்… அறிமுக உரை
முல்லைஸ்வரம் இசைக்குழு இயக்குனர்
கு.யோகேஸ்வரன்… வாழ்த்துரை உரை
முத்தையன்கட்டு வலது கரை மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு நாகேந்திரன் அவர்கள்.. இவர்களோடு
மிகவும் சிறப்பாக நிகழ்வு நடைபெற்றது..
முதல் பிரதியை ஆலயத்தின் தலைவர்
அவர்கள் வழங்கி வைக்க கனடாவில்
இருந்து பல வருடங்களுக்கு பின்
வருகை தந்திருந்த திரு சின்னத்துரை
நந்தகோபால் அவர்கள் பெற்றுக்கொண்டார்
என்பது குறிப்பிட தக்கது…