மூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம்“கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம் அவர்கள்02.-
09.19.அன்று „கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாரிஸ் பாலம் படைப்பகம் வாழ்நாள் சாதனையாளர் (கலையரசு)விருது பெற்ற மூத்த அறிவிப்பாளர் C.நடராஜசிவம் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறது.

தேசிய ஒருமைப்பாடு அரசகருமமொழிகள்,
சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள்
அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களின் எண்ணக்கருவில் உருவான தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைகளுக்கான அரசவிருது 2019 வழங்கல் விழா கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் 02.09.19.நடைபெற்றது.

மூன்று தலைமுறைகளாக பிரிக்கப்பட்டு கலைஇளவரசி,கலைச்சுடர்,கலைமாமணி,
கலையரசு,என்று விருதுகள் வழங்கப்பட்டதாகவும்
அந்தவகையில் இலங்கை ஒ.கூ.மூத்த அறிவிப்பாளர் C.நடராஜசிவம் அவர்களுக்கு கலையரசு விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விருது பெற்ற நடராஜசிவம் அவர்களையும் கலைஞர்களுக்கான மதிப்பளிப்பை வழங்கிய கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களையும் வாழ்த்துவதில் பாரிஸ் பாலம் படைப்பகமும் பேரானந்தம் அடைகிறது.

„உலகெங்கும் நமது மண்ணின் மணம்கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்டும் „(K. P. L)