யாழ் மண்ணின் பிரபல அறிவிப்பாளர் அமரர் மணிக்குரல் மேஜர் சண் அவர்களின் 73வது பிறந்ததினம் 28.12.2020

யாழ் பஸ்நிலையம்,நவீன சந்தை விளம்பர ஒலிபரப்பில் மறக்கமுடியாத „மணிக்குரல்’அமரர் மேஜர் ஷண்72ஆவது பிறந்தநாள். 28.12.19.வாழ்த்தும். )18வதுஆண்டு நினைவுநாள் 03.12.19 பிரார்த்தனையும்.இனி…யாரும் மறக்கமுடியாத மறைக்கமுடியாத பிரபல அறிவிப்பாளர் அமரர் „மணிக்குரல் மேஜர் ஷண் அவர்கள் பற்றி..,,அமரர் மேஜர் சண் அவர்கள் ஆரம்ப கல்வியை கொட்டடி நமசிவாயவித்தியாசாலையிலும் பின்னர் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் கற்றவர்.அமரர் மேஜர் ஷண் அவர்கள் 1970 ம் ஆண்டு „மணிக்குரல்“வர்த்தக விளம்பர சேவையை அவரது சகோதரர் அமரர் வை.சின்.தர்மலிங்கம் அவர்களுடன் யாழ்/பேரூந்து நிலையத்துக் அண்மையிலுள்ள யாழ்/புதிய நவீன சந்தைக் கட்டிடத்தில் ஆரம்பித்தார்.வானொலி அனுபவமின்றி யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த அறிவிப்பாளராக மிளிர்ந்தார்.அதோடல்லாது ஈழத்தில் தலைசிறந்த இசைக்குழுக்களுக்கும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கினார்.மேஜர் சண் அவர்களுக்கு 1974 ம் ஆண்டு அன்றைய மாநகர சபை முதல்வரால் யாழ் முத்தவெளி மைதானத்தில் விழா ஒன்றின் போது“மணிக்குரல் „மேஜர் ஷண் என கௌரவபட்டம் வழங்கப்பட்டது.அக்காலகட்டத்தில் இலங்கையில் புகழ்பூத்த அறிவிப்பாளர்களோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததோடு மட்டுமல்லாது தனக்கு பின் துலங்கக்கூடிய அறிவிப்பாளர்களையும் உருவாக்கிவிட்ட பெருமைக்குரியவர் மேஜர் சண் அவர்கள்.இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் மத்தியிலும் மதிப்பிற்குரியவராக திகழ்வதற்கு இவரது குரல்வளத்துடன் சேர்ந்த ஸ்ரைலுமே முக்கிய காரணம்.மேஜர் சண் என்றால் மணிக்குரல். மணிக்குரல் என்றால் மேஜர் ஷண்.இவரது கல்லூரி வாழ்க்கையிலேயே இவரது கலைத்துறை இளவயதிலிருந்து ஆரம்பிக்க தொடங்கிவிட்டது.பிரபல இலங்கை வானொலி, மேடை அறிவிப்பாளர் திரு.லோகேஷ் அவர்கள் இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.குறுகிய காலத்தில் இவரது அறிவிப்புத்துறை வளர்ச்சி யாழ்/வர்த்தகர்களால் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்றது.இவரது சேவையில் இறைதொண்டும் கலந்திருந்தது குறிப்பாக தொண்டமனாறு செல்வச்சந்நிதி,மவிட்டபுரம், நல்லூர்,ஆலய திருவிழாக்காலங்களில் யாழ்/பேரூந்து நிலையத்தில் ஆயிரக்கணக்காக திரண்டு நிற்கும் அடியார்களுக்கு அவசர தேவைகட்கு இவரது மணிக்குரல் விளம்பர சேவை இலவசமாக கிடைத்தது.ஆகவே இவர் யாழ் மண் மக்கள் மத்தியில் இன்றளவும் நினைவுகூரபட்டுக்கொண்டிருக்கும் அறிவிப்பாளர் என்பது மறக்கவோ மறைக்கவே முடியாதது.மேஜர் ஷண் அவர்களுக்கு தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு வருகைதந்த டொக்ரர் ஏப்ரகாம் கோவூர் (அக்காலத்தில் மனோதத்துவ நிபுணராக திகழ்ந்தவர். )“சொற்கொண்டல்“ எனப்பட்டமளித்து கௌரவித்தார்.அதுமட்டுமல்லாது யாழ் கழகத்தினரால் „சொற்சுரவி „எனக் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சோ.சீவரத்தினம் அவர்கள். யாழ் மண்ணின் பிரபலமான மணிக்குரல் விளம்பர ஒலிபரப்பின் அமரர் மேஜர் ஷண்ணின் முத்திரை என்ற தனது கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.1962ம் தைத்திங்கள் 13ம் நாள்.தமிழ் அரசுக்கட்சி சிறப்பு மாநாட்டில் தென்னகத்து தலைவர்களான முரசொலி மாறன்,நாஞ்சில் மனோகரன்,மதியழகன்,எங்கள் தலைவர்களான தந்தை செல்வநாயகம்,செ.இராசதுரை,அ.அமிர்தலிங்கம்,கலைஞர்களான கலையரசு சொர்ணலிங்கம்,நடிகமணி V.v.வைரமுத்து, திரைப்பட நாடக கலைஞர் ஏ.ரகுநாதன், முன்னிலையில் நாடகம்அரங்கேறியது நாடகத்தை பார்த்த அறிஞர் பெருமக்களை மட்டுமல்லப் பார்வையாளர்களையும் ஆனந்தபரவசம் அடையவைத்தது.முருகனாக நடித்த அந்த சிறுவனின் நடிப்பு (சிறுவன்தான் மேஜர் ஷண் அமரர் ஷண்முகலிங்கம்)தலைவர்களின் சிறப்பு வாழ்த்து எதிர்காலத்தில் சினிமாவில் நடிக்கக்கூடிய பிரகாசமான ஒளிமயம் நாஞ்சில் மனோகரன்.ஈழத்தாய் ஈன்ற நடிப்பின் நட்சத்திரக்குழந்தை.கலையரசு சொர்ணலிங்கம்.இவர் நடித்த சிறப்பு நாடகங்கள்.பங்குனித்திங்கள்,பாசத்தின் எதிரொலி, போனால் போகட்டும் போடா, சிவகங்கை சீமை.மேஜர் ஷண்ணின் விளம்பர சேவை ஸ்தாபனம் மணிக்குரல் யாழ் வர்த்தக விளம்பர சேவையில் ஒர் மைல் கல்.மணிக்குரல் விளம்பரசேவையில் சேவையாற்றி பயிற்சி பெற்றோர் பிரான்ஸ், ஜேர்மன்,போன்ற நாடுகளில் அறிவிப்புத்துறையில் மிளிர்வது அமரர் மேஜர் சண்ணின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.1978ம் ஆண்டு அன்று தீபாவளி கொடிகாமம் பகுதியில் அண்ணன் அமரர் குமார் தனபால் அவர்களின் ‚தம்பி கொழும்பிலை „நகைச்சுவை நாடகம் யாழிலிருந்து போய்க்கொண்டிருந்தோம் நாடகம் அங்கு இறுதி நிகழ்வு இடையில் சாவகச்சேரி தெய்வேந்திரா திரையரங்கில் பிரமாண்ட இசைநிகழ்ச்சி முதல் நிகழ்ச்சியாக அமரர் மேஜர் ஷண் வித்தியாசமாக இசையும் கதையும் மேடையில் தனித்து நின்று அழகுபடுத்தி நடத்திக்காட்டுகிறார் இவர் கதைசொல்கிறார் பாடகர் பாடகி பாடலை பாடுகிறார்கள்.இவரது அழகான தோற்றமும் கதைசொல்லும் ஸ்ரைலும் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் யாரையும் பின்பற்றாதது சுகதம்.ஆதால் இவரின் அறிவிப்புக்கு ரசிகர்கள் வட்டம் இருந்தது பலரின் அவதானிப்புக்குரியது.யாழ் மண்ணில் இவரது மற்ற சகோதரர் வை.சின். சற்குணம் தொடர்ந்து அறிவிப்பில் அசத்தி வருகிறார்.அமரர் மேஜர் சண் அவர்கள் பிறந்தமாதத்திலே அமரத்துவமடைந்து இருக்கிறார் என்பதை உங்கள் கவனத்து கொண்டு வருகிறேன்.K.P.L)பி.குயாழ்மண்ணில் விளம்பர ஒலிபரப்பு தோற்றம் பத்திரிகை விளம்பரம் மற்றும் நம்மவர்கள் கையாண்ட விளம்பர உத்திகள் பற்றியும் மக்கள் குரல் திரு.புனிதலிங்கம், மணிக்குரல்,மற்றும் வர்த்தக பிரமுகர் தியாகராஜா அவர்களின் முதலீட்டில் உருவான விளம்பரசேவை போன்ற யாழ் மண்ணின் பல சுவாரஸ்யமான பதிவொன்றையும் தருகிறேன் காத்திருங்கள். நன்றி.“உலகெங்கும் நமது மண்ணின் மணம்கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்டும் “