வசந்த் செல்லத்துரை டென்மார்க். புலம் பெயர் சினிமாவின் ஈழத்து அடையாளம்..

அப்பாவையும் பிள்ளைகளையும் அறியாதவர் ஈழத்தவராக இருக்க முடியாது.தேசியத் தலைவன் மண்ணில் உதித்த மாணிக்கங்கள்.மண்ணையும் மக்களையும் நேசிக்கும் பிரியர்கள்.ஆசிரியர் k.s.துரை அவர்கள் இயக்கிய திரைப்படங்கள் அனைத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்ற பிள்ளையிவன்.படத் தொகுப்பு. இசை.என பன்முக ஆளுமையாளன். டென்மார்க்கில் சினிமாத்துறையில் கற்க வேண்டிய பல துறைகளை கற்று முடித்து பட்டம் பெற்ற ஒரேயொரு ஈழப்பிள்ளையிவன். தந்தையின் இயக்கத்தில் இளம் புயல்.பூக்கள்.உயிர்வரை இனித்தாய் எனும் முத்தான முழு நீளப் படங்களில் முத்திரை பதித்த கலைஞன்.இவனோடு நடித்தேன் என்பதில் எனக்கு வாழ் நாள் சாதனை விருது போன்ற திருப்தியுண்டு..
ஐபிசி தொலைக் காட்சியில் நான் இயக்கிய நகைச்சுவைத் தொடர் புரோக்கர் பொன்னம்பலம் என்ற தொலைக் காட்சி நாடகத்துக்கு எழுத்தோட்ட பாடலுக்கு இசை அமைத்து பாடித் தந்த பிள்ளையிவன்.
சாதனைகளைப் படைத்து வரும் அற்புத குடும்பம். சகோதரி அர்ச்சனா முதல் விமான ஓட்டியாக நிமிர்ந்தவள்…அரங்கங்கள் இவனைக் கண்டால் சேர்ந்தாடும். ஒலிவாங்கிகள் துள்ளிக் குதிக்கும். பாடல் நகைச்சுவை அறிவுப்பு என அசத்தும் வல்லவன்.இவனோடு நான் சந்தித்த அரங்குகளில் இவனால் எனக்கு பெருமை..உச்சங்களை தொட்ட படி கண் முன்னே வளரும் பிள்ளை இவன் இன்று அவுஸ்த்திரேலியா பயணமாகின்றான்.ஊர் சுற்றிப் பார்ப்தற்கோ கலை நிகழ்ச்சிக்கோ அல்ல அங்குள்ள பல்கலைக்கழகத்துக்கு சினிமா விரிவரையாளனாக மெல்போன் நகருக்கு புறப்பட்டுள்ளான்..சாதணைகளை நீட்டிச் செல்லும் எங்கள் பிள்ளைகளை வாழ்த்துவோம் வாருங்கள்..வசந்த் மேலும் பல பரினாமங்களால் அசுர வெற்றிகளைப் பெற்று எம்மவர்க்கு பெருமை சேர்ப்பான்.வடிவங்கள் மாறும் என்ற எங்கள் வல்லவன் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனங்கள் கண்முன்னே விரிவது கண்கூடு.சென்று வாடா வசந்த். வென்று வாடா என உரிமையோடு வாழ்த்தி வழி அனுப்புகின்றோம் எங்கள் ஆசிகளும் வாழ்துக்களும் என்றும் உன்னை வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். நிறைவான வாழ்த்துக்கள் வாழிய வாழியவே…