வளர்தமிழ் 05-12 வரையான மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி நூல் வெளியீட்டு15.10.2018

15.10.2018 ( திங்கட்கிழமை )யேர்மனியின் தலைநகர் பேர்லின் மாநகரத்தில் வளர்தமிழ் 05-12 வரையான மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கட்டுரை ஆசிரியர் திருமதி. ஞானகௌரி கண்ணன் ( இசை ஆசிரியர்) அவர்களையும், வெளியீட்டு நூல்களையும் அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் இருமருங்கும் மங்கல விளக்குடன் அழைத்து வர பி.ப 5 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.

தொடர்ந்து அகவணக்கம், வரவேற்புரையை தொடர்ந்து ETR அகரம், தீபம் சஞ்சிகை ஆசிரியர் திரு.த.இரவீந்திரன் அவர்களின் வெளியீட்டுரையை தொடர்ந்து நூலுக்கான மதிப்பீட்டுரையினை முன்னைநாள் மேஜர் பாரதிகலைக்கூட பொறுப்பாளரும், முன்னைநாள் கல்விக்கழக மாநிலப்பொறுப்பாளரும், அறிவிப்பாளருமான, திரு.L.வலன்ரைன் அவர்கள் மிகவும் சிறப்பாக நிகழ்த்த தொடர்ந்து கவிமாமணி கி.த.குகதாஸ் அவர்களின் வாழ்த்துரையுடன் பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன

தொடர்ந்து பல கல்விமான்கள், ஆலயஅறங்காவலர்கள், பாடசாலை ஆசிரியர்களின் வாழ்த்துரைகள், வாழ்த்துப்பா கவிகள் என்பவற்றுடன் நூலின் ஆசிரியரின் ஏற்ப்புரையுடனும் ,நன்றியுரையுடனும் இரவு 9.30 மணியளவில் நிகழ்வு இனிதாக அமைந்தது. நிகழ்வுகளை மிக நுண்ணியமாக இளம்அறிவிப்பாளர் திருமதி. கதீஷ்யா செந்தூரன்அவர்கள் தொகுத்து வழங்கினார்